Subscribe Us

ரணில் - மங்கள ஆகியோருக்கிடையில் மோதலா? போலி தகவல் பரப்பும் மர்ம ஆசாமிகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் மோதல் என ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு போலித் தகவல்களை பரப்பிய இருவர் ஆதாரத்துடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதான தேசிய பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரும் பிரதமர் அலுவலக ஊடக ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரும் இதில் தொடர்புபட்டுள்ளமை உறுதியாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மங்கள சமரவீரவுடன் அரசியல் கருத்து வேறுப்பாட்டிலுள்ள பிரதமர் அலுவலக பிரதானியின் தேவைக்கமைய, இந்த நபர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குறித்த அதிகாரி கூறியுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் கணனி மற்றும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி குறித்த போலியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவல ஊடக அதிகாரியினால் ஏனைய தேசிய பத்திரிகையின் தன்னார்வ பத்திரிகையாளர்களுக்கும் இணைய ஊடகவியலாளர்களுக்கும் இச் செய்தியை வழங்கப்பட்டு பிரபலமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த வாரம் பிரபலமாக்கப்பட்ட குறித்த போலியான செய்திக்கமைய,

அமெரிக்கா, ஐ.நா. கூட்டத்தொடர் ஆகியவைகளில் கலந்து கொண்டு அந்த நடவடிக்கைகளை நிறைவு செய்திருந்த வெளியுறவு அமைச்சரை, பிரதமரின் ஜப்பான் விஜயத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை எனவும் அதன் காரணமாக மனமுடைந்த மங்கள லண்டனுக்கு சென்று தனது நேரத்தை செலவிட்டதாக போலியான செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தன.

எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவித்தலுக்கமையவே விசேட இராஜதந்திர கடமையை நிறைவு செய்வதற்காக வெளியுறவு அமைச்சர் லண்டன் நோக்கி சென்றுள்ளார் என தங்களுக்கு தகவல் கிடைத்ததாக பிரதமர் அலுவலக சிரேஷ்ட அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments