கொட்டதெனியாவ சிறுமி சேயா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.
கொட்டதெனியாவ பொலிசார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பொலிசார் ஆகியோருக்கு எதிராக அவர் முறைப்பாடு செய்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
கொண்டயாவின் சட்டத்தரணியான உதுல் பிரேமரத்ன சகிதம் அவர் நேற்று அவர் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு நேரில் வருகை தந்து தனது முறைப்பாட்டைக் கையளித்துள்ளார்.
சட்டவிரோத கைது, தடுத்துவைத்தல், தாக்குதல் மேற்கொண்டமை, தவறான தகவல்களை சமூகத்தில் பரப்பியமை ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளை அவர் பொலிசாருக்கு எதிராக முன்வைத்துள்ளதாக சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.


0 Comments