Subscribe Us

header ads

மது அருந்தக்கொடுத்து நண்பணின் காரை திருடிய நண்பன்

தனது நண்பனுக்கு மது அருந்த கொடுத்து நண்பனின் 17 இலட்சம் ரூபா பெறுமதியான காரையும் காரிலிருந்த வங்கி  ஏ.டி.எம். அட்டையையும், செல்லிடத் தொலைபேசியையும் திருடிய  கண் பார்வையற்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வென்னப்புவ, சிறிகம்பல பிரதேசத்தைச் சேர்ந்த ஹெட்டியாராச்சிலாகே தினேஸ்  பியதாச என்பவரே  கைது செய்யப்பட்ட சந்தேக நபராவார்.
கொச்சிக்கடையைச் சேர்ந்த  எல்.ஏ.சமிந்த தினுஸ்க (35 வயது)  என்பவரே முறைப்பாட்டாளராவார்.
சம்பவம் தொடர்பாக  மேலும் தெரியவருவதாவது,
முறைப்பாட்டாளரும் சந்தேக நபரும் நண்பர்களாவர். இருவரும்  பேசமுடியாத  மற்றும் காது கேளாதவர்களாவர்.  முறைப்பாட்டாளர் தனியார் கம்பனியொன்றில் பணியாற்றுபவராவார். அவருக்கு அந்த நிறுவனத்தால் கார் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம்  இடம்பெற்ற கடந்த வெள்ளிக்கிழமை  (23) அன்று சந்தேக நபர் மதுபான போத்தல் ஒன்றை எடுத்துக்கொண்டு முறைப்பாட்டாளரின் வீட்டுக்குச் சென்றுள்ளார், அங்கு இருவரும்  நள்ளிரவு வரை மது  அருந்;தியுள்ளனர். முறைப்பாட்டாளர் மதுபோதையில் இருந்தபோது சந்தேக நபர்  அவரின் கார் சாவியை எடுத்துக்கொண்டு  ஒருவருக்கும் தெரியாமல் காரை கடத்திச் சென்றுள்ளார். 
அந்தக் கார் வென்னப்புவ பிரதேசத்தில் வைத்து மின்சாரக் கம்பம் ஒன்றில் மோதியுள்ளது. இதனை அடுத்து  சந்தேக நபர் காரை அங்கேயே கைவிட்டுவிட்டு காரிலிருந்த வங்கி ஏ.ரி.எம். அட்டையையும், செல்லிடத் தொலைபேசியையும்  எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.
கைவிடப்பட்ட காரை   வென்னப்புவ பொலிஸார் மீட்டுள்ள நிலையில், முறைப்பாட்டாளர் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். இதனை அடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments