Subscribe Us

header ads

இந்த அரசாங்கமும் காடழிப்பு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது: பாலித தெவரப்பெரும

இந்த அரசாங்கமும் காடழிப்பு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் மீண்டும் காடழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த அசராங்கம் சுமார் 700 முதல் 800 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டி விற்பனை செய்தது.

இந்த அரசாங்கத்தில் இருக்கும் ஒரு சிலர் மக்களுக்கு விவசாய காணிகளை வழங்கும் போர்வையில் காடழிப்பு மேற்கொள்கின்றார்கள்.

இதனால் பாரியளவில் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றமை வருத்தமளிக்கின்றது. அண்மையில நான் முல்லைத்தீவு, கொக்கிளாய் போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்திருந்தேன்.

காடழிப்பு பற்றி ஆராயவே நான் சென்றிருந்தேன்.

சுமார் 30 – 40 ஏக்கர் காடுகள் ஒவ்வொரு இடங்களிலும் அழிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருந்ததனைக் காணக் கூடியதாக இருந்தது.

எந்த அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் காடழிப்பு மேற்கொள்வோரை தண்டிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும கொழும்பு பத்திரிகையொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் இடம்பெற்ற காலத்தில் வடக்கு கிழக்கில் காடுகள் அழிக்கப்படவில்லை எனவும்,

போரினால் ஏற்பட்ட ஓரே நன்மையாக காடழிப்பு இடம்பெறாததனை குறிப்பிட முடியும் எனவும் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments