கல்பிட்டி நகரமும் அதனை அண்டிய கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது ...
கல்பிட்டி நகரை பொறுத்த வரை இங்கு மக்கள் செறிவாக வாழ்கின்றனர் , அதோடு வட புல மக்களும் இணைந்துள்ளனர் ...
ஆக , மக்கள் தொகைக்கு ஏற்ப இங்கு நீர் வளம் இல்லை , அதே நேரம் மக்கள் தொகை அதிகம் என்பதால் மலசல கூடங்களும் , கிணறுகளும் அருகருகே அமைந்துள்ளது இதனால் நீர் மாசடைந்துள்ளது.
அதேநேரம் இங்குள்ள ஏனைய பகுதிகளும் விவசாய பிரதேசம் என்பதால் விவசாயிகளால் பயன்படுத்தப்படும் இரசாயான பசளை பாவனை மூலமும் நில நீர் பாதிப்படைந்து குடி நீர் பாவனைக்கு எற்புடையதாய் இல்லை (உதாரணம் - முதலைப்பாளி ,முசல்பிட்டி )..
இவ்வாறான விடயங்களால் இதனை பாவிக்கும் மக்கள் சிறுநீரக பாதிப்பு உற்பட பல பாதிப்புகளை அனுபவிக்கும் நிலைக்கு உள்ளாகி உள்ளார்கள்
இதனை கருத்தில் கொண்டு வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் , நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார் .
இதன் பயனாக சவூதி அரசின் நிதி உதவிகளோடு இப்பகுதி மக்களுக்கு தூய நீர் பெற்றுகொடுக்கும் முஸ்தீபுகள் மேற்கொள்ள படுகிறது ...
-ஊடக பிரிவு -
எஸ்.எச்,எம்.நியாஸ்
வடமேல் மாகாண சபை உறுப்பினர் ,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்


0 Comments