கருணாரத்ன மற்றும் சந்திமாலின் அபார ஆட்டத்தினால் முதல் இன்னிங்ஸை வலுப்படுதிக்கொண்டது இலங்கை அணி.
இலங்கை –- மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் திமுத் கருணாரத்ன மற்றும் சந்திமாலின் அபார ஆட்டத்தினால் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 250 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
நேற்று காலியில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் சில்வா ஆகியோர் நிதானமாக ஆடிக்கொண்டிருக்க 17 ஓட்டங்களுடன் சில்வா ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு களமிறங்கிய திரிமான்னவும் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கருணாரத்னவுடன் ஜோடி சேர்ந்தார் சந்திமால். இந்த இருவரும் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி, நேற்றைய ஆட்ட நேர முடிவின்போது 250 ஓட்டங்களை அணிக்காக சேர்த்தனர்.
அபாரமாக ஆடிய கருணாரத்ன 135 ஓட்டங்களை விளாசினார். மறுமுனையில் நின்ற சந்திமால் 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இந்த இருவரும் ஆட்டமிழக் காமல் களத்தில் இருக்கின்றனர். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.


0 Comments