ஜோர்ஜியா நாட்டில் பழைய விமானமொன்றை சிறார்களுக்கான பாலர் பாடசாலையாக மாற்றியுள்ளனர்.
முன்னாள் சோவியத் யூனியனின் குடியரசுகளில் ஒன்றாக விளங்கிய ஜோர்ஜியாவில் தலைநகர் திபிலிஸில் இருந்து, 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ரஷ்டவி நகரில் இந்தப் பாடசாலை உள்ளது.சோவியத் காலத்தைச் சேர்ந்த யக் – 40 (Yak – 40) ரக விமானமொன்றே இவ்வாறு பாலர் பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளது.
ஜோர்ஜியன் எயார்வேஸ் நிறுவனத்தினால் பயன்படுத்தப்பட்ட இவ்விமானம் பழைமையானதாக இருந்தபோதிலும் முழுமையாக இயங்கக்கூடிய நிலையில் அதை மேற்படி பாடசாலையில் அதிபரான கெரி சப்டிஸ் வாங்கி, பாடசாலையாக மாற்றியுள்ளார். இவ்விமானத்துக்குள் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான தளபாடங்கள் மற்றும் விளளையாட்டுப் பொருட்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments