Subscribe Us

இன்று உலகம் அழியப்போகின்றது?

உலகம் இன்றுடன் (புதன்கிழமை) அழியப்போவதாக புனித விவிலியத்தின் குறிப்பினை மேற்கோள் காட்டி, கணிப்பொன்று வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் பிலடெல்பியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு ஒன்று அந்த கணிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27ம் திகதி தோன்றிய ‘ரத்தநிலா’ தெரிந்ததன் பின்னர் உலகம் அழியும் என்று அந்த கிறிஸ்தவ நிறுவனம் முன்னறிவித்திருந்தது.
இந்த நிலையில், தங்களால் ஏற்கனவே முன்னறிவித்தது போன்ற நிகழ்வு இன்று (அக்டோபர் 7) ஏற்படும் என்று பிலடெல்பியா விவிலிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
‘இன்றோடு உலகம் முற்றிலுமாக அழியும்’ என்று தெரிவித்துள்ளார் அதனால், இன்று உலகம் அழிக்கப்படும் என பிலடெல்பியாவில் உள்ள கிறிஸ்தவ மத கூட்டமைப்பின் இணையப் பிரிவு தலைவர் கிறிஸ் மெக்கென் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்றையதினம் உலகமானது தீயினால் அழிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
திருவிவிலியத்தில் குறிப்பிட்டுள்ளதன்படி, இந்தத் திகதியில் கடவுள் பேசியபோது முதலில் படைக்கப்பட்ட உலகம் நோவா காலத்தில் நீரினால் அழிக்கப்பட்டது அதன் பின்னர் அவ்வாறு ‘நான் உலகை நீரினால் அழிக்கமாட்டேன்’ என கடவுள் தெரிவித்தார். ஆனால் 2ம் பேதுருவின் 2ம் அதிகாரத்தில் ‘அவர் உலகத்தை நெருப்பினால் அழித்துவிடுவார்’ எனும் வாக்கியம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 27ம் திகதி ‘சூப்பர் மூன் எக்லிப்ஸ்’ என்று அழைக்கப்பட்ட அரிய சந்திர கிரகணம் பூமிக்கு மிக அருகில் வந்தது மட்டுமன்றி வழக்கத்துக்கு மாறாக இந்த கிரகணம் மிகத் தெளிவாக காணப்பட்டது.
இவ்வாறான நிகழ்வுகள் நடைப்பெறுவதற்காண காரணம் உலக அழிவினை குறித்து எச்சரிக்கை வழங்கவேயாகும் எனவும் அப்பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments