நல்லாட்சி அரசாங்கத்தில் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடியினதும் அவரது பிரதி அமைச்சர் அனோமா கமகேயினதும் பயன்பாட்டிற்கு 6 கோடி ரூபா பெறுமதியான பீ.எம். டபிள்யு. வாகனங்கள் இரண்டு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோலியத்றை நிறுவனமான சீ.பீ.எஸ்.ரி.எல். இன் நிதியினால் இந்த சொகுசு வாகனங்கள் இறக்குமதிக்கு அவசரமாக அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவினதும், புதிய பணிப்பாளர் சபையினதும் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர் பிரச்சினை, பவுஸர் பற்றாக்குறைப் பிரச்சினை, எரிபொருள் விலை தொடர்பான பிரச்சினை போன்றவற்றுக்குத் தீர்வு காணப்படாமல் அரசாங்கத்தின் நிதி சொகு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு உபயோகிக்கப்படுவது நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஒரு அவப்பெயராகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
0 Comments