கஹவத்த, கொடகெதன பிரதேசத்துக்கு மேலதிக பாதுகாப்புக்காக மேலும் 500 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பிரதேசத்தில் இதுவரை 19 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இளம் பெண் ஒருவரும் அவரது தாயும் வசிக்கும் இப்பிரதேசத்தின் வீட்டுப் பகுதியில் கூரிய ஆயுதத்துடன் ஒருவர் நடமாடுவதாக நேற்று முன்தினம் இரவு இப்பிரதேச வாசிகள் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரைக் கைது செய்வதற்கு தேவையான தேடுதல் நடவடிக்கையை நேற்று முதல் அப்பிரதேசத்தில் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. பிரதேசவாசிகள் மீண்டும் அச்சத்தில் வாழ்வதாக குறிப்பிடப்படுகின்றது. இதன்காரணமாகவே அப்பிரதேசத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
0 Comments