கொடதெனியாவ சேயா சதெவ்மி கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 40 DNA பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கொலை இடம்பெற்ற இடத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உயிரியல் ஆதாரங்கள், சேயாவின் உயிரியல் ஆதாரங்கள், சேயாவின் உடலிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உயிரியல் மாதிரிகள் அடங்கலாக 40 பரிசோதனைகள் மேட்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த பரிசோதனைகள் நான்கு சந்தேக நபர்களை மைய்யப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஒரு பரிசோதனைக்கு 5000 ரூபாய் முதல் 19,000 வரை செலவாகிறது. இது தொடர்பான அனைத்து பரிசோதனைகளும் ஜிண்டெக் நிறுவனத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments