Subscribe Us

எச்.ஐ.வியை 300 பெண்களுக்கு பரப்பியதாக நபரொருவர் பரபரப்பு வாக்குமூலம்

இந்தியாவின் ஐதராபாத்தில் எச்.ஐ.வி பாதித்த நபரொருவர் சுமார்300 பெண்களுக்கு அந்நோய் தொற்றை ஏற்படுத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

31 வயதானமுச்சக்கர வண்டி ஓட்டுநரான அந்நபர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்தும் கூட எந்த விதமான பாதுகாப்பும் இன்றி விலை மாதரிடையேயும், பெண்களிடமும் தொடர்ந்து உறவு கொண்டுள்ளார்.

குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி செல்வதை பயன்படுத்தி குடும்ப பெண்களை ஏமாற்றி அவர் உறவு வைத்ததால் 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவர் எச்.ஐ.வியை பரப்பியுள்ளார்.

திருட்டு வழக்கொன்றில் கைது செய்யப்பட்ட அவர் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். அந்த நபர்தற்போதுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

Post a Comment

0 Comments