பிரிட்டனின், எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவர் அனூப் ஷா தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், மிகக் குறைந்த செலவில் மாரடைப்பைக் கண்டறிய வழியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாரடைப்பு ஏற்பட்டதோ! என எண்ணும் நோயாளிகள் ‘ஹை சென்ஸிட்டிவிட்டி பிளட் மார்க்கர்’ என்கிற இந்த பரிசோதனையைச் செய்தால் போதுமாம்! பொதுவாக, அமிலத்தன்மையால் ஏற்படும் மார்பு எரிச்சல் பல நேரங்களில் நமக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாக பீதியை ஏற்படுத்தும்.
இதுபோன்ற சந்தேகம் எழும்போது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், வலி ஏற்பட்ட மூன்று மணிநேரத்துக்குள் இந்த பரிசோதனையை செய்தால், இதய அலைகள் சார்ந்த கார்டியோகிராப் வரைப்படம் மூலமாக 99 சதவிகிதம் துல்லியமாக அந்நபருக்கு ஏற்பட்டது மாரடைப்பா? அல்லது, அமிலத்தன்மை (அசிடிட்டி) சார்ந்த பிரச்சனையா? எனத் தெரியவரும்.
இந்த 200 ரூபாய் சிகிச்சையின் மூலம் மார்பு வலி என்று பதறியபடி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் மூன்றில் இரண்டு மடங்கு பேர் சந்தேகம் நீங்கி நிம்மதி பெருமூச்சு விடலாம்.
சில தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி உள்ளிட்ட வசதிகளின் அடிப்படையில் தற்போது இந்த சோதனைக்கு ஐநூறு ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக தெரிகிறது.

0 Comments