Subscribe Us

header ads

சங்கா - மஹேலவின் 14 வருட கால சாதனையைத் தகர்த்த இளையவர்கள்...

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை அணியின் 3வது விக்கெட்டுக்கான சிறந்த இணைப்பாட்ட சாதனையை இன்று காலி டெஸ்ட் போட்டியில் டிமுத் கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் இன்று புதிதாக்கியுள்ளனர்.

238 ஓட்டங்களை இன்று குவித்த திமுத் - தினேஷ் இணைப்பாட்டம் புதிய சாதனையாகியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முன்னைய இலங்கை அணியின் 3வது விக்கெட்டுக்கான சிறந்த இணைப்பாட்ட சாதனை 2001ஆம் ஆண்டு குமார் சங்கக்கார - மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் பெற்றிருந்த 162 ஓட்டங்களாகும்.

இலங்கை அணியின் இளைய துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் முறையே தமது 3வது, 5வது டெஸ்ட் சதங்களை இந்த டெஸ்ட் போட்டியில் பெற்றுள்ளதோடு, டிமுத் கருணாரத்ன தன்னுடைய அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையையும் பெற்றுள்ளார்.

டிமுத் கருணாரத்ன 186 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை இரு விக்கெட் இழப்புக்கு 250 ஓட்டங்களோடு ஆரம்பித்த இலங்கை அணி, மதிய போசன இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 344 ஓட்டங்கள்.

டிமுத் கருணாரத்ன 186 ஓட்டங்கள்.

தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்கள்.

Post a Comment

0 Comments