Subscribe Us

header ads

கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன் - 100-க்கும் மேற்பட்ட ஏழைகளை மகிழ்வித்த மணப்பெண்...

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த குய்ன் என்ற பெண்ணுக்கு திங்கள்கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது. அதற்காக ஒரு 4 ஸ்டார் ஹோட்டலில் அனைத்து ஏற்படுகளும் செய்யப்பட்டிருந்தது. 

ஆனால் கடைசி நேரத்தில் போன் பண்ணிய மணமகன், திருமணத்தை நிறுத்தும்படி கூறிவிட்டார். இதனால் மணப்பெண்ணும் அவரது தாயும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பல லட்சம் செலவு செய்து ஏற்பாடு செய்திருந்த அனைத்து ஏற்பாடுகளையும் வீண்ணடிக்க அவர்கள் விரும்பவில்லை. 

இதனால் அந்த நகரத்தில் இருக்கும் வீடற்ற 120 ஏழைகளை 4 ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து, திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்தர உணவுகளை சாப்பிட செய்து மகிழ்ந்துள்ளனர். மணப்பெண் மற்றும் அவரது அம்மாவின் இந்த செயல் பலரது பாராட்டுதலை பெற்றுவருகிறது. 

இதே நம்ம ஊராக இருந்தால் மாப்பிளையை ஒருவழி பண்ணியிருப்பார்கள் அல்லது குடுபத்தோடு விஷத்தை குடித்திருப்பார்கள்.

Post a Comment

0 Comments