இங்கிலாந்தின் தென் கிழக்கில் உள்ள, கிழக்கு சஸ்ஸெக்ஸ் நகரை ‘பினியான்கள்’ ஆட்கொண்டுள்ளனர். கடந்த திங்கள் கிழமை திடீரென இப்பகுதியின் முக்கிய தெருக்களில் அனிமேஷன் திரைப்படமான ‘மினியான்’ கதாப்பாத்திரத்தைப் போன்ற தோற்றத்தில் குப்பைத் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
காமெடியில் கலக்கும் ‘மினியான்’ கதாப்பாத்திரத்துக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்து வெற்றியடைந்துள்ள நிலையில், இந்தப் பகுதியில் இருக்கும் பலரும், திடீரென தோன்றிய இந்த மினியான் குப்பைத் தொட்டிகளை ஆச்சர்யத்துடன் ரசித்தனர். அத்துடன், இதுபோல மொத்தம் பத்து தொட்டிகள் வைக்கப்பட்டிருப்பதை அறிந்ததும் பூரிப்படைந்து வேறு எங்கெல்லாம் இதை வைத்துள்ளனர் எனத் தேடிப்போய் பார்த்துவிட்டு வந்துள்ளனர்.
திடீரென இங்கு வைக்கப்பட்டுள்ள மினியான் தொட்டிகளின் பின்னணி குறித்து இப்பகுதியின் மேயரிடம் கேட்டனர். ஆனால், அவரும் இது பற்றி தெரியாது என கைவிரித்து விட்டாராம். இப்பகுதி மக்கள் ‘பினியான்’ என தற்போது செல்லமாக இவற்றை அழைத்து வருகின்றனர்.
இவை திடீரென தோன்றியிருந்தாலும் மக்களின் மனதுக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்து வருவதால், மேயரும் அது அங்கேயே இருக்கட்டும் எனக் கூறியுள்ளார். இதை வைத்த காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்.., வைத்தது யாரென தெரிந்தால் அவர்களுக்கு இப்பகுதி மக்களிடம் இருந்து பாராட்டு காத்திருக்கிறது.
டுவிட்டர் பக்கத்திலும் இந்த பினியான்களின் புகைப்படங்களை பகிர்ந்து இதன் பின்னணியைத் தேடி வருகின்றனர் சஸ்ஸெக்ஸ் மக்கள்
0 Comments