Subscribe Us

header ads

புத்தளம் ஸாகிராவில் நடைபெற்ற மென்பந்து கிரிகட் சுற்றுப்போட்டி (PHOTOS)


புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின், Zahira Quality Club கீழ் இயங்கும் Zahira Quality Food Society-யினால் நடத்தப்பட்ட அணிக்கு 6 பேர், 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட சாஹிரா தே.பா. 7 ஆம் தரம் வகுப்புகளுக்கு இடையிலான Healthy Cricket மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி நேற்று (26) காலை 8.00 மணி முதல் சாஹிரா பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இச் சுற்றுப்போட்டியில் தரம் 7 சேர்ந்த 6 அணிகள் கலந்துகொண்டன. நொக் அவுட் முறையில் நடத்தப்பட்ட போட்டித் தொடரில் King Stars (7D) வெற்றியீட்டியது. இரண்டாமிடத்தை Tasarof Tigers (7C) பெற்றுக்கொண்டது.

போட்டி நடுவர்களாக ZQFS உறுப்பினர்களான சிப்ரி ரஹ்மதுல்லா, எம்.என்.எம். நுஸ்கி ஆகியோரும் புள்ளியிடுபவர்களாக ரஹ்மி அதாஸ், எம்.என்.எம். நவீத் ஆகியோரும் கடமையாற்றினர்.

வெற்றியாளர் King Stars (7D)
எம்.ஏ.எம். அஸ்ரான் (தலைவர்)
எம்.என்.எம். ஹைதம்
எம்.எப். அப்ஸல்
எம்.என்.எம். நஜாஹ்
எம்.ஜே.எம். அஸ்ஜத்
எம்.எஸ். முஸ்தாக்

இரண்டாமிடம் Tasarof Tigers (7C)
ஏ.எஸ். அதீப் அஹ்மத் (தலைவர்)
எம்.எஸ். ஸபாரத்
எம்.என். நஸாத்
எம்.என். அப்துல்லா
எம்.ஏ. அயாஸ்
எம்.எஸ்.எம். ஸஹ்த்

வெற்றியாளர்களுக்கான கிண்ணங்களும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வைபவ ரீதியாக வழங்கிவைக்கப்படும் என ZQFS தலைவர் சிப்ரி ரஹ்மதுல்லா Kalpitiya Voice –க்குத் தெரிவித்தார்.

மேலும், இப் போட்டிகளை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சி. யாகுப், பகுதித் தலைவர் ஆசிரியர் எம்.எச்.எம். சலீம் மரிக்கார், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் எம்.எப்.எம். ஹுமாயூன், ZQC பொறுப்பாசிரியர் ஜே.இஸட். நமாஸ் ஆகியோருடன் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் ZQFS சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார். 









Post a Comment

0 Comments