Subscribe Us

header ads

வன்னி பிரதேச அபிவிருத்திக்கான. அங்குரார்ப்பண ஒன்று கூடல் நிகழ்வு


யுத்ததின் பின்பு முஸ்லிம் மக்கள் வாழ்ந்த பல  கிராமங்கள் அரசியல்வாதிகள் ஊடாகவும் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்கள் மூலம் பல அவிருத்திகளை கண்டாலும் இன்னும் சில சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுகொள்ள முடியாத சமூகமாக வன்னி முஸ்லிம் சமூக வாழ்ந்து வருகின்றது.

வன்னி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்  மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கானும் நோக்குடன் வவுனியா,மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள சமூக ஆர்வலர்கள்,சமூக சேவையாளர்கள்,அரசியல்வாதிகள், 
கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆலிம்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் சகோதர்களையும் இணைத்து கொண்டு பல மாத காலமாக வன்னி விடியல் என்ற சமூக வலை தளத்தில் பேசி கொண்ட கருத்துக்களை பகிர்ந்து கொண்ட குழுவின் முதல் கன்னி  ஒன்று கூடல் நிகழ்வு இன்று 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு புத்தளம்/இலவங்குளம் பிரதேசத்தில் இடம் பெற உள்ளது.


இன் நிகழ்வில் வன்னி பிரதேச  அபிவிருத்திக்கான நிர்வாக தெரிவு  இன்னும் பிரதேசத்தில் காணப்படுகின்ற அவசர பிரச்சினைக்கு உடனடி தீர்வுகள் மற்றும் இன்னும் பல  அபிவிருத்தி திட்டங்கள் முவைக்கபட உள்ளது.

> வன்னி விடியல் ஊடகபிரிவு
> வன்னி அபிவிருத்தி நோக்கிய நீண்ட பயணம்

Post a Comment

0 Comments