Subscribe Us

header ads

தயத்துடிப்பைக் கூட பதிவு செய்யும் அதி நவீன ஆப்பிள் வாட்ச்: பென்சிலுடன் கூடிய ஐபேட் ப்ரோ... (PHOTOS)



உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த ஆப்பிள் நிகழ்வை தொடங்கி வைத்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், இது ஆப்பிளுக்கு மிகப் பிரம்மாண்டமான வருடம், இன்றிரவு பல பிரம்மாண்டமான அறிவிப்புகள் காத்திருக்கிறது என்று சஸ்பென்ஸ் கூட்டினார். ஆப்பிள் வாட்ச் பற்றி பேசத்தொடங்கிய டிம், அதன் வாடிக்கையாளர் திருப்தியுணர்வு(Customer Satisfaction) 97 சதவீதம் என்றதும் அரங்கம் அதிர்ந்தது.

இந்த புதிய ஆப்பிள் வாட்சில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் உள்ளது. இதில் ஹார்ட்வேர்களையும் உபயோகப்படுத்த முடியும். 19 மொழிகளை ஹெட் போன்கள் மூலமாகவே இந்த ஆப்பிள் வாட்ச் மொழிபெயர்க்கும். ஆப்பிள் வாட்சில் உள்ள ஏர் ஸ்ட்ரிப் என்ற ஆப்சை விளக்கிய போது அனைவரும் பிரம்மிப்பின் உச்சிக்கே சென்றனர். காரணம் இதன் மூலமாக குழந்தையின் இதயத்துடிப்பை தாய் பதிவு செய்து, அதை மருத்துவருக்கு அனுப்பி உடனடியாக அறிவுரையை பெற முடியும். நினைத்துப் பாருங்கள் இது நோயாளிகளுக்கு எவ்வளவு பயனுடையதாக இருக்கும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி குழந்தையின் இதயத்துடிப்பை கேட்ட போது எப்படி பிரம்மிப்படையான்மல் இருக்க முடியும்.?

லெதர் ஸ்ட்ரிப்களிலும் இந்த வாட்ச் கிடைக்கும் என்பது கூடுதல் ஸ்பெஷல், கோல்ட், ரோஸ்கோல்ட், மற்றும் பல விதங்களில் செய்யப்பட்ட பல்வேறு ஆப்பிள் வாட்ச்களை அறிமுகப்படுத்தினார். வருகிற செப்டம்பர் 16 முதல் ஆப்பிள் ஸ்டோர்களில் இந்த வாட்ச்கள் கிடைக்கும்

அடுத்து ஐபேட், எதிர்கால தனி நபர் கணினித் துறையில் ஐபேடின் முக்கியத்துவம் குறித்து பேசிய டிம் குக், இது வரை தயாரித்த ஐபேட்களிலேயே அதிநவீனமானது என்று கூறி புத்தம் புதிய ஐபேட் ப்ரோவை அறிமுகப்படுத்தினார். 12.9 இஞ்ச் ஸ்க்ரீன் அளவுக்கு பெரிய திரை கொண்ட ஐபேட் ப்ரோ, 5.6 மில்லியன் பிக்சல் அளவுக்கு துல்லியம் கொண்டது. இதில் படங்கள் பார்ப்பது மிகவும் பிரமாதமான அனுபவமாக இருக்கும்.

இதில் உள்ள சிப் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த 64 பிட் சிப்பாகும். இது பல மடங்கு வேகமும், நினைவகத்திறனும் கொண்டது. இது மடிக்கணியை விட 80 சதவீதம் வேகமானது. இதன் பேட்டரி 10 மணி நேரம் வரை  நிலைத்து நிற்கக் கூடியது. 4 கே அளவு குவாலிட்டி கொண்ட, வீடியோவைக் கூட இதில் பார்க்க முடியும். இதனுடன் வழங்கப்படும் ஆப்பிள் பென்சில் குறித்து டிம் குக்குக்கு பின்னால் உள்ள திரையில் காட்சிகள் விரிந்ததும் அரங்கம் அதுவரை இல்லாத உற்சாகம் கொண்டது. இந்த புதிய பென்சில் மூலமாக கட்டிடக்கலை வரைபடங்கள் மற்றும் ஓவியங்களை மிகவும் துல்லியமாக வரைய முடியும்.

மல்டி டச் டிஸ்ப்ளே இருப்பதால் நாம் கொடுக்கும் அழுத்தத்திற்கேற்ப கோடுகளின் அடர்த்தியில் மாறுதல் ஏற்படும். இதற்கான செயல்விளக்கங்களில் மைக்ரோசாப்ட் மற்றும் அடோப் நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

ஐபேட் ப்ரோவின் விலை 799 டாலரில் இருந்து 1079 டாலர் வரை ஆகும். (இந்திய மதிப்பில் சுமார் 53 ஆயிரம் ரூபாய் முதல் 71 ஆயிரம் ரூபாய் வரை) இருக்கும்.







Post a Comment

0 Comments