கற்பிட்டியில்
புதியதோர் அரசியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்த களமிறங்கி இருக்கும் “நல்லாட்சிக்கான
கற்பிட்டியின் இளைஞ்சர் சம்மேளனம்” (Kalpitiya Youth Forum
for Good Governance) KYFGG எனும் எமது அமைப்பு நேற்று (19-09-2015)
அங்கத்தவர்களுக்கான
பொதுக்கூட்டம் ஒன்றை பல சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடாத்தி முடித்தது.
இந்தக்கூட்டத்தில் கடந்த வார கூட்டத்திலும் பார்க்க அதிக
எண்ணிக்கையிலான இளைஞர்களும், அனுபவமிக்க
புத்திஜீவிகளும், உலமாக்களும்
கலந்துகொண்டனர்.
இந்தக்கூட்டத்தை
ஆரம்பித்து உரையாற்றிய KYFGG
அமைப்பின் தலைவர் அவர்கள் எமது அமைப்பு குறுகியகால
செயற்திட்டமாக “எதிர்வரும்
பிரதேச சபைத் தேர்தலுக்கான அரசியல் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக உழைத்தல்” என்ற விடயத்தை
எடுத்துள்ளதை அறிமுகம் செய்து வைத்தார். அல்ஹம்துலில்லாஹ்!
இவரைத்தொடர்ந்து உரையாற்றிய KYFGG
அமைப்பின்
உப-தலைவர் அவர்கள் எமது அமைப்பு எடுத்துள்ள குறுகியகால செயற்திட்டம் தொடர்பில்
விளக்கமளித்ததோடு புதிய அங்கத்தவர்களை உள்வாங்குதல் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து கேள்வி பதில், கலந்துகொண்டவர்களுக்கான
விளக்கமளித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.
சுமார் 20வருட காலமாக கற்பிட்டி பிரதேச
சபைக்கு கற்பிட்டியிலிருந்து தலைவர் ஒருவரை தெரிவு செய்யமுடிது உள்ளதற்கு என்ன
காரணம் என்ன வரலாற்று பிழைகள் என்பன நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. இறுதியாக எமது
அமைப்பு இது தொடர்பான பொது ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளுடன்
கூட்டம் இரவு 10.00 மணியாலவில் இறை நாமத்துடன் இனிதே நிறைவுற்றது.
KYFGG Media Unit







0 Comments