.
அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவர் அஹமத் முஹம்மத், தான் உருவாக்கிய டிஜிட்டல் கடிகாரத்தை தனது பாடசாலைக்கு கொண்டு வந்து அறிவியல் ஆசிரியரிடம் காண்பித்துள்ளார். அதைப் பார்த்த அறிவியல் ஆசிரியர் மாணவர் அஹ்மதை பாராட்டியுள்ளார்.
.
சிறிது நேரம் கழித்து முஸ்லிம் விரோதப் போக்கு கொண்ட ஒரு ஆசிரியை அதைப் பார்த்துவிட்டு, போலீசுக்கு போன் செய்து மாணவர் அஹமத் ஒரு டைம்பாம் செய்து கொண்டு வந்துள்ளார் என்று கூறியுள்ளார்.
.
இதையடுத்து அமெரிக்கப் போலீசார் அம்மாணவரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். விசாரணையில் திரும்பத் திரும்ப கடிகார வெடிகுண்டு ஏன் செய்தாய்? எப்படி செய்தாய்? என்று கேட்டுள்ளனர். மாணவர் அஹமத், அது வெடிகுண்டு இல்லை, டிஜிட்டல் கடிகாரம் என்று கூறி அழுதுள்ளார். இதையடுத்து போலீசார் மாணவரை விடுவித்துள்ளனர்.
.
அறிவியல் மாணவர் கைது செய்யப்பட்ட தகவல் வலைதளங்களில் பதியப்பட்டு ஆசிரியை மற்றும் போலீசாரின் செயல்களுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இத்தகவல் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கிடைக்கவே அவர் ட்விட்டரில் அம்மாணவரைப் பாராட்டி வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
.
மேலும் பேஸ்புக் நிறுவனரும் மாணவரைப் பாராட்டி பேஸ்புக் அலுவலகத்தில் பணிபுரிய அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல் நாசா நிறுவனமும் பாராட்டியுள்ளது.
.
மாணவருக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. ஆசிரியைக்கும், போலீசாருக்கும் தொடர்ந்து கண்டனங்கள் கிடைத்தவண்ணம் உள்ளன.
.
நன்றி: MMK Media


0 Comments