Subscribe Us

header ads

கற்பிட்டியின் குரலின் வாசகர்களுக்கு இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழத்துக்கள்.


எங்குமுள்ள இறையவனின் ஏவலினைச் செய்ய‌
        எங்கள் நபி இப்ராஹீம் எழுந்தனர் வாளேந்தி
செங்குருதி கண்ணெதிரே செம்மையுடன் பாய்ச்சும்
        சிந்தையுடன் தம் மகனைத் தியாகமிடச் சென்றார்!

அந்த பெரும் நினைவாலே அல்லாஹ்வின் பேரில்
        அல்லலுறும் மாந்தருக்குத் தியாகமென்னச் செய்தோம்?
அந்தமிகும் வாழ்விதனில் கொஞ்சமேனும் செய்ய‌
        இந்த பெருநாளிலே வாக்குறுதி கொள்வோம்!

"அல்லாஹு அக்பர்" என்ற தக்பீரை மொழிந்து
         அல்லாஹ்வின் நினைவோடு அணிவகுத்து நின்று
உள்ளோரும் இல்லாரும் உளங்கனிந்து வேண்டும்
         உயர்வான "அரஃபாத்"தைக் கொண்ட திருமாதம்!

மாந்தரினில் "ஹஜ்"ஜுக்குச் சென்றுவரும் பேற்றை
         மறையவனே! பல்லோர்க்கும் மகிழ்வுடனே அளித்தாய்!
பாங்கு தரும் கடமைகளில் ஐந்தாவதனில் - யாம்
         பங்கு பெற வாழ்வில் ஒருமுறையேனும் அருள்வாய்!

மங்கி வரும் ஒழுக்கங்களில் மறு மலர்ச்சியோடும்
         மங்காத நபி வழியில் மன எழுச்சி வேண்டும்!
பொங்கும் மறைப் போதனையில் சிந்தையுடன் செயலும்
         பொருளினையும், நீண்டதொரு ஆயுளினையும் தருவாய்!

'குர்ஆனி'ன் கட்டளையைத் தம் மனதிற் கொண்டு
'குர்பானி'யை மதிப்பறிந்து செய்யும் திருநாளில்
"உன்னத ஓர் இறையவனிச் சிரம் வணங்கிப் போற்றும்
உலகமெலாம் வாழ்க!"வென வாழ்த்து நவில்கிறோம்!

அனைத்துலக மக்களுக்கும் இந்த இறையடியாளர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள்… இந் நன்நாளில் எல்லாம் வல்ல இறைவன் நமக்கு நோய் நொடியற்ற வாழ்வை வழங்கவும், இம்மை மறுமையில் வல்ல ரஹ்மானுக்கு பிடித்தமான வாழ்வு வாழவும், மறுமை நாளில் எம் பெருமானார் நபிகள் நாயகம் ரஸுலுல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரையைப் பெற்ற மக்களுள் ஒருவராக இடம் பெறவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டிக் கொள்கிறோம்… 

உலகம் முழுதும் உள்ள எல்லா மனிதர்களும் கடவுளின் படைப்புக்கள் கடவுளை அடைய தமக்கு சரி என்று பட்ட மதத்தை தேர்ந்தேடுத்துக்கொண்டனர் , ஆனால் உலகில் அதிகமானவர்கள் மத நம்பிக்கையில் உள்ளவர்கள் என்ற எடுகோளுக்கு வரமுடியும் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன் ,தாழ்ந்தவன், படித்தவன், பாமரன், கருப்பன் வெள்ளையன், இந்த பாகு பாடுகளையும் தாண்டி மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் என்கின்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத கடமைதான் இஸ்லாத்தின் ஐந்தாவது கடமை ஹஜ் ஆகும், இந்தவகையில் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நல்ல மனம் படைத்த எல்லா  நண்பர்களுக்கும் கற்பிட்டியின் குரலின் இனிய ஹஜ்ஜுப் பெருாநாள் நல்வாழ்த்துக்கள்.

-KV நிருவாகம்-

Post a Comment

0 Comments