Subscribe Us

header ads

அம்மாவை மீட்டுத் தாருங்கள்: சவுதியில் அடைபட்டுள்ள பெண்ணின் மகள் வேண்டுகோள்


கலட்டுவாவ பகுதியில் வசித்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தயாரான எஸ்.வசந்தி என்பவர் சவுதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் சிறைவைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் காரணமாக அவரின் கை செயலிழந்து போயுள்ளது.
அந்தப் பெண்ணின் தாயார் எமக்கு இதுபற்றித் தெரிவிக்கையில்;
அடித்து உணவு கொடுக்காது அறையில் போட்டு பூட்டி வைத்துள்ளனர். எனது பிள்ளையை எவ்வாறாயினும் என்னிடம் கொண்டுவந்து தருமாறு நான் தாழ்மையுடன் கேட்கின்றேன்.
என்றார்.
துயரத்தினைத் தாங்கிக்கொள்ள முடியாது தப்பித்து சவுதி பொலிஸாரிடம் சென்ற பெண்ணை மீண்டும் அந்நாட்டு பொலிஸார் அதே வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அடைபட்டுள்ள பெண்ணின் மகள் தெரிவித்ததாவது;
பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி அம்மா சென்றார். அவருக்கு உணவு வழங்காது அறை ஒன்றில் பூட்டி வைத்துள்ளனராம். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குச் சென்றாலும் அவர்கள் எந்த விடயத்தையும் செவிமடுப்பதில்லை. இரண்டு, மூன்று தடவைகள் சென்றோம். அமைச்சருக்கும் சில ஆவணங்களைக் கையளித்துள்ளோம்.
என்றார்.
இந்த துயரத்தை அதிகாரிகள் கேட்க மறுக்கும் நிலையில், அம்மாவைக் காப்பாற்றித்தருமாறு வசந்தியின் பிள்ளைகள் இறைவனிடம் இரஞ்சுகின்றனர்.
-Shakthi News 1st-

Post a Comment

0 Comments