Subscribe Us

header ads

லைவ் நிகழ்ச்சியில் காயம் அடைந்த ஜான் சினா நலமாக உள்ளார்: டபிள்யூ.டபிள்யூ.இ. அறிவிப்பு- வீடியோ ...



உலக மல்யுத்த பொழுது போக்கு (WWE)-ன் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் ஜான் சினா. இவர் 12 முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அத்துடன் 23 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


இவர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஹாம்ப்டனில் நடைபெற்ற லைவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஜான் சினாவை எதிர்த்து கெவின் ஓவன்ஸ் சண்டையிட்டார். சண்டையின் பரபரப்பான கட்டத்தில் ஓவன்ஸ் ஜான்சினாவை தூக்கி தரையில் அடித்தார். அப்போது ஜான்சினாவிற்கு தலையில் அடிப்பட்டது.

ஆனால், காயத்தை பொறுப்படுத்தாமல் மேலும் ஐந்து நிமிடங்கள் சண்டையிட்டு ஜான்சினா வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதும் ஆரவார மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் ஜென்சினா அரங்கத்தை விட்டு வெளியேறினார். இது ரசிகர்களை கவலையடையச் செய்தது. அத்துடன் வர இருக்கும் போட்டிகளில் அவர் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழும்பியது.

ஆனால், காயம் ஏற்பட்ட ஜான்சினா தற்போது நலமாக உள்ளார் என்று  டபிள்யூ.டபிள்யூ.இ. செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதனால் அவர் நடைபெற இருக்கும் அனைத்து போட்டியிலும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. வருகிற 20-ந்தி நடைபெற இருக்கும் ‘நைட் ஆப் சாம்பியன்’ போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மல்யுத்தத்தை தாண்டி ஜான் சினா ‘You can't See me’ ராப் (Rap) ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். The marine (2006), 12 Rounds (2009) மற்றும் Legendary (2010) ஆகிய படத்திலும் நடித்துள்ளார்.

Post a Comment

0 Comments