மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி உத்தரவிட்டால் அதனை நிறைவேற்ற தாம் தயாராகவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெலிக்கடை சிறச்சாலையில் அதற்கான வசதிகள் காணப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை மீண்டும் அமுல்ப்படுத்துவ தொடர்பில் தமக்கு ஆட்சேபனைகள் இல்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி பாராளுமன்றம் அனுமதி வழங்கினால் அடுத்த வருடம் முதல் மரண தண்டனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக நேற்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments