உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அகதிகள் வருகை அதிகரித்ததை அடுத்து செர்பியாவுடனான எல்லைப்பகுதி மூடப்படுவதாக குரோஷியா அறிவித்துள்ளது.
ஒரே நாளில் சுமார் 10ஆயிரம் பேர் குரோஷியாவிற்குள் நுழைந்துள்ளதாகவும், இதனால் செர்பியா எல்லைப்பகுதியில் உள்ள எட்டு நுழைவாயில்களில் ஏழு மூடப்பட்டுள்ளதாகவும், நாட்டிற்குள் நுழைந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இனி மேலும் குடியேறிகளை தாக்குப் பிடிக்கும் சக்தி எங்கள் நாட்டுக்கு இல்லை என குரோஷியா பிரதமர் அறிவித்துள்ளார்.
ஹங்கேரி தனது எல்லைகளை மூடிவிட்ட நிலையில், குரோஷியா மற்றும் ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளும் அகதிகளை தடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளன.
இதற்கிடையே, இந்த தடையை மீறி டோவார்னிக் ரெயில் நிலையம் அருகேயுள்ள இரும்புப்பாதை வழியாக குரோஷியாவுக்குள் நுழைய முயன்ற மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் சிலர் காயமடைந்தனர்.


0 Comments