சகோதரன், சகோதரியுடன் வளர்ந்தவரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு இதன் அருமை புரியும். ஒரு அக்கா தனது தம்பியின் உடல் முழுக்க ‘பீனட் பட்டர்’ என்ற உணவை (வேர்கடலையை வறுத்து, அரைத்த பசை. இது பிரட் போன்றவற்றின் மீது தடவி உண்ணும் உணவு வகை) பூசிக்கொண்டிருக்கிறார்.
சாப்பிடக் கொடுத்த அதை பாட்டிலோடு எடுத்து தம்பி மீது பூசிக்கொண்டிருக்கும்போது, அம்மா வந்துவிட்டார். தம்பியை என்ன செய்கிறாய்? எனக் கேட்டதற்கு மழலை மாறாத அந்தக் குட்டிப் பெண் ‘தடவிக் கொண்டிருக்கின்றேன்’ என்கிறார்.
பீனட் பட்டர் இனிப்பான பண்டம் என்பதாலோ என்னவோ? அந்த ஒன்றரை வயது சிறுவனும் குஷியாக அதை எடுத்து தன்மீது தடவி விளையாடியது. நல்லவேளை.. காரமாக எந்த உணவுப் பண்டமும் வைக்கப்படவில்லை. அப்படி இருந்திருந்தால் நிலைமை தலைகீழாய் போயிருக்கும்!
இந்த அக்கா தம்பியின் குறும்பு வீடியோ, உங்களது வாழ்வில் நிகழ்ந்த இனிப்பான சம்பவத்தை நினைகூற வைத்தால், இதனை எழுதி வெளியிடும் எங்களுக்கும் மகிழ்ச்சியாய் இருக்கும்... வீடியோ இணைப்பைக் கண்டுகளியுங்கள்.
0 Comments