Subscribe Us

header ads

மீன்களை தினசரி உண்போருக்கு மன அழுத்தம் குறையும்! ஆய்வில் தகவல்...



மீன்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வோருக்கு மன அழுத்தம் குறையும், அதிலும் ஆண்களுக்கு வெகுவாக குறையும் என சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

சீனாவின் கிழக்கில் உள்ள ஷாண்டோன்ங் மாகாணத்தில் இருக்கும் க்விங்டாவ் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் ஆய்வுக் குழு தினசரி உணவில் மீன் உண்ணும் சுமார் ஒன்றரை லட்சம் மக்களைக் கொண்டு ஆய்வு நடத்தியது. அவர்களின் ஆரோக்கியம் தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய 2001-2014-ம் ஆண்டுகளுக்குள் உள்ள பட்டியலை ஆய்வு செய்ததில், அவர்களின் மன அழுத்தம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

மீனில் இருக்கும் ‘ஒமேகா 3’ என்ற கொழுப்பு அமிலம் இவ்வகையில் மன அழுத்தத்தை குறைப்பதாக இந்த முதல் நிலை ஆய்வின் மூலம் தெரிகிறது. இது மூளையில் உருவாகும் வேதிப்பொருளில் மாற்றத்தை ஏற்படுத்துவதால் இவ்வாறு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

மீன் எண்ணெய் உட்பட பலவகை மீன்களில் அதனை வறுத்தோ, வேக வைத்தோ உண்ணும்போது, இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நமது உடலுக்கு கிடைக்கிறது. இந்த சத்தை வேகவைத்த பசலைக் கீரை, வறுத்த சோயா பீன்ஸ் மற்றும் வால்நட் (எண்ணெய்) போன்றவற்றின் மூலம் சைவப் பிரியர்கள் பெற முடியும்.

Post a Comment

0 Comments