Subscribe Us

header ads

மாரடைப்பால் மரணம்: ஐக்கிய அரபு அமீரக பிரதமரின் மகன் உடல் புர் துபாயில் அடக்கம் செய்யப்பட்டது...



மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்த ஐக்கிய அரபு எமிரேட்டின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் மன்னருமான ஷேக் முஹம்மது பின் ரஷித் அல் மக்தூம் மூத்த மகனான ஷேக் ரஷித் பின் முஹம்மது பின் ரஷித் அல் மக்தூம் (33) உடல் புர் துபாயில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

ஷேக் ரஷித் பின் முஹம்மது பின் ரஷித் அல் மக்தூம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் துபாய் நாட்டில் மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள அரசு அலுவலகங்களில் ஷேக் ரஷித் பின் முஹம்மது பின் ரஷித் அல் மக்தூம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், துபாயில் உள்ள ஸபீல் மசூதியில் (உள்ளூர் நேரப்படி) இன்று மாலை நடைபெற்ற ‘ஜனாஸா’ தொழுகைக்கு பின்னர் ஷேக் ரஷித் பின் முஹம்மது பின் ரஷித் அல் மக்தூமின் உடல் புர் துபாயில் உள்ள உம்ம் ஹரிர் கப்ருஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது.

ஷேக் ரஷித் பின் முஹம்மது பின் ரஷித் அல் மக்தூம் மறைவுக்கு தொலைபேசி மூலமாகவும், நேரில் வந்தும் தனக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் துபாய் ஆட்சியாளர் ஷேக் முஹம்மது பின் ரஷித் அல் மக்தூம் நன்றி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments