இன்றுடன் 2015ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரிட்சைகள் முடிவடைகின்றன. ஒரு மாணவனது பாடசாலைக் கல்வி வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம் தான் உயர்தரம். தனது எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்றால் மிகையல்ல.
என்ன தான் படித்தாலும் மாணவர்கள், வாலிபர்கள்,இளம் இரத்தங்கள் என்ற வகையில் எந்த வகையான சூழலுக்கும் விரையில் இசைவாக்கம் அடைந்து விடுவார்கள். இவர்களது எதிர்காலத்தை வளமானதாக மாற்ற வழிகாட்டுதல்கள் கட்டாயம் அவசியப்படுகின்றன.
அந்த வழிகாட்டுதல்கள் கட்டாயம்
• பாடசாலைகள் அபிவிருத்திச் சங்கங்கள்
• பள்ளிவாயல் நிர்வாகங்கள்
• கிராம அபிவிருத்தி சங்கங்கள்
• வாலிபர் சங்கங்கள்
• இஸ்லாமிய இயக்கங்கள்
• சமூக விழிப்புணர்வு இயக்கங்கள், மன்றங்கள்,குழுக்கள்
போன்ற இன்னோரன்ன அமைப்புக்களாலும் வழங்கப்படுதல் வேண்டும்.
இப்படி வழங்குகின்ற நேரத்தில் தான் எமது எதிர்காலத்தில் ஆளுமையுள்ள,
ஆற்றல்மிக்க, துடிப்புள்ள சந்ததியினர் உருவாக்கப்படுவர்.
முளையில் நாம் தவறை விட்டு விட்டு எதிர்காலத்தில்,
• பள்ளி நிர்வாகத்திற்கு தேர்வு செய்ய ஒரு நல்லவர் கூட ஊரில் இல்லை.
• எமது ஊரில் ஆளுமைமிக்க ஒருவர் இல்லை.
• நல்ல இஸ்லாமிய விழுமியம் மிக்க அரசியல்வாதி இல்லை.
• அவர் மட்டும் தான் ஊரில் படித்திருக்கின்றார் ஆனால் ஊரைக் கணக்கெடுக்கின்றார் இல்லை
என்று நாம் கவலைப் படுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
எனெனில் தலைவர் யாரும் தானாக உருவாவதில்லை. சந்தர்ப்பம் வழங்கப்பட்டு சரியான முறையில் அடையாளம் காணப்பட்டு உருவாக்கப்பட வேண்டும்.
-Roomy Mohamed Mujas-
0 Comments