Subscribe Us

header ads

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் குழுவினருக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் ஜனாதிபதி


எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பிரதிநிதிகள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். அமெரிக்க விஜயத்தின் போது ஜனாதிபதி, தம்மோடு பயணிக்கும் பிரதிநிதிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அமெரிக்க விஜயத்தின் போது ஜனாதிபதி, தம்மோடு பயணிக்கும் பிரதிநிதிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

கடந்த காலங்களில் பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்காவிற்கு விஜயம் செய்வது வழமையானதாகும்.

இம்முறை சொற்ப அளவிலான பிரதிநிதிகளே ஜனாதிபதியுடன் இணைந்து அமெரிக்கா பயணம் செய்யவுள்ளனர்.

மேலும், அமெரிக்க விஜயம் தொடர்பிலான ஏற்பாடுகளை தமது உத்தரவுகளுக்கு அமைய மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவருக்கு கடுமையான ஆலோசனை வழங்கியுள்ளார்.

தாம் உள்ளிட்ட பிரதிநிதிகள் தங்குவதற்கு பாரிய பொருட் செலவில் நட்சத்திர ஹோட்டல்களை ஒதுக்கீடு செய்ய வேண்டாம்.

ஹோட்டல் அறைகளில் மதுபானம் இருக்கக் கூடாது.

பயணங்களுக்காக பல லட்சம் ரூபா செலவிட்டு லிமோசின் கார்கள் தேவையில்லை.

விருந்தினர் தங்கும் அறைகளில் வயது வந்தவர்களுக்கு பார்வையிடக் கூடிய படங்களை பார்க்க முடியாது என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பயண ஏற்பாடுகளை செய்யுமாறு கோரியுள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் பங்கேற்றதுடன் அதற்கான அனைத்து செலவுகளையும் அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments