அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக மாணவி தாரா மன்றோ(20) குடித்துவிட்டு கார் ஓட்டியதால் அவரது ஓட்டுனர் உரிமத்தை பறிகொடுத்தார்.
பல்கலைக்கழத்துக்குள் நடந்த ஒரு பாட்டுக் கச்சேரிக்கு காரில் சென்ற தாராவிடம் மது அருந்தியிருக்கிறாரா என அறியும் ‘பிரெத்தலைசர் டெஸ்ட்’ செய்யச் சொன்னபோது தாரா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரது ஓட்டுனர் உரிமத்தை போலீசார் பறித்தனர். இதனை அறிந்த அவரது தந்தை கோபத்தில் அவரிடமிருந்து காரையும் பறித்துக் கொண்டார்.
ஒரு ஆவேசத்தில் காரை பறித்தாலும், இதன் பின்னர் அவள் படிக்கும் பல்கலைக்கழத்துக்குள் பயன்படுத்த சைக்கிள் வேண்டுமா? என பாசமான தந்தை தன் மகள் தாராவிடம் கேட்டார்.
இதனை மறுத்து ‘ஓட்டினால் நாலு சக்கர வாகனம் மட்டுமே ஓட்டுவேன்’ என கோபப்பட்ட தாரா, குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் பேட்டரியில் இயங்கும் இரண்டாம்தர ‘பார்பி ஜீப்’-ஐ வாங்கிக்கொண்டு தற்போது கேம்பஸை வலம் வருகிறார். இது ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். இந்த ஜீப்பிற்கு முந்தைய உரிமையாளரான செர்லீன் என்ற சிறுமியின் பெயரை வைத்துள்ளார் தாரா.
தவறே செய்திருந்தாலும், இந்தகால இளைஞர்கள் தமது பிரச்சனையை அணுகும் விதமே தனிதான்..! இதுபோன்ற கிறுக்குத்தனமான நடவடிக்கைகளாலேயே கேம்பஸ் மட்டுமல்லாது டுவிட்டரிலும் தற்போது ஸ்டாராகி உள்ளார், தாரா!
0 Comments