அபு அலா -
அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியாலையின் 25வது தொற்றாநோய் சிகிச்சை நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை (22) வைத்தியசாலையின் தொற்றாய்நோய் பிரிவில் இடம்பெற்றது.
வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிச் செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் வைத்தியசாலையில் கடமையாற்றும் தொற்றாநோய் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ரீ.எப்.நப்தா, பெண் விடுதி பொறுப்பதிகாரி எப்.எப்.எஸ்.பரிவீன், வெளிநோயளர் பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எப்.எம்.நைரோஸா மற்றும் டாக்டர்களான எம்.பி.எம்.றஜீஸ், எம்.என்.எப்.றிஸ்மியா ஆகியோர் பங்கேற்றிருந்த இந்நிகழ்வில் பிரதம அதிதி ரீ.ஜே.அதிசயராஜ் உரையாற்றுகையில்,
பொதுமக்களை ஆயுள்வேத வைத்தியத்துடன் இணைக்கும் ஒரு செயற்திட்டத்தை அறிமுகம் செய்து அதன் மூலம் எமது மக்கள் நீண்ட பயனைப்பெறவேண்டும். கிழக்கு மாகாணத்தில் தொற்றாநோய் சிகிச்சை முறையை ஆயுள்வேத வைத்தியத்துறைக்கு முதன் முதலில் அறிமுகம் செய்துகாட்டிய பெருமையும், அச்சிகிச்சை முறையை ஏனைய ஆயுள்வேத வைத்தியசாலைகளும் இன்று பின்பற்றுமளவுக்கு வந்துள்ள பெருமையும் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பருக்கே உரித்தாகும்.
இன்று உலகில் ஆங்கில வைத்தியமுறை மிக பிரபல்யமாகி வருகின்ற நிலைமையில், பொதுமக்கள் ஆங்கில வைத்திய சிகிச்சை முறையை அதிகம் பின்பற்றி வருகின்றனர். இந்த வைத்தியத்தினால் எமக்கு ஏற்படும் நோய்களை மிக விரைவில் குனமடைய வைக்கலாம். ஆனால் ஆங்கில வைத்திய சிகிச்சை மூலம் எமக்கு ஏற்படும் பக்கவிளைவுகளை நாம் அறிவதில்லை.
ஆயுள்வேத வைத்திய சிகிச்சை முறையை நாம் கையாள்வோமாக இருந்தால் எந்த பக்கவிளைவுகளும் அற்ற நிலைமையில் எமது உடலை பாதுகாத்து வருவதுடன் மிக நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழ எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். இவ்வைத்திய சிகிச்சை முறையைப் பற்றி இங்கு வந்துள்ளவர்கள் மட்டும் அறிந்திருந்தால் மட்டும்போதாது ஏனைய பொதுமக்களுக்கும் இவ்வைத்திய சிகிச்சையை மறையைப் பற்றி நாம் எடுத்துச் சொல்லவேண்டும். இதன் மூலம் பொதுமக்களை ஆயுள்வேத வைத்திய சிகிச்சையின் பக்கம் அழைப்பு விடுப்பதன் மூலம் ஆயுள்வேத வைத்திய சேவையை இன்னுமின்னும் இச்சேவையை பொதுமக்களுக்கு நீடித்து வழங்க வழிவகுக்கும் என்றார்.
இதேவேளை இன்றை தொற்றாநோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற வந்தவர்களுக்கு தூய பசும்பால் வழங்கி வைத்தார்.


0 Comments