Subscribe Us

header ads

‘வேற்றுப் பாதை’ (குறுந் திரைப்பட) படப்பிடிப்புத் தளத்தில் நடந்தவை

-The Puttalam Times-

பாடசாலை சீருடையில் நிற்கும் சிறுவன், இயக்குனர் சர்மா ‘Action என்றவுடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கும் வாலிபனிடம் வருகின்றான். ‘Cut’ சர்மாவின் முகத்தில் திருப்தியில்லை. கீழ் உதட்டைக் குவித்து கடித்துக்கொள்கின்றார். சிறுவனின் அருகில் வந்து மெலிதான குரலில் ஏதோ சொல்கின்றார். சிறுவனும் தலையாட்டிக்கொண்டான்.



மீண்டும் சிறுவன் (வினித்முதலில் நின்ற இடத்துக்குச் செல்கின்றான். சர்மா ‘Action’ என்று குரல்கொடுக்க மோ. சைக்கிளுக்கு அருகில் வருகின்றான். ‘அன்னா என்ட சைக்கிள் பெச் ஆகிட்டு’ சொல்லி முடிப்பதற்குள் சர்மா ‘Cut’ என்றார். மோ. சைக்கிளில் இருக்கும் வாலிபனிடம் (யோகவிதூஷன்) ‘வினித் கிட்ட வந்த பிறகு திரும்பிப் பார்க்கனும். அதுக்குள்ள ஏன் பார்த்தே’. ‘ச்சா.... மிஸ் பன்னிட்டேன்’ இப்போது விதூஷன் வாயை சுளிக்கின்றான்.

மீண்டும் அந்தக் காட்சி படமாக்கப்படுகின்றது. மூன்றாவது முறையும் சர்மாவுக்குத் திருப்தி இல்லை. நான்காவது முறை ‘Good’ என்றார். எல்லோர் முகத்திலும் ஆறுதல் சிரிப்பு. ஒளிப்பதிவாளர் பர்ஹானைப் பார்க்கின்றார் சர்மா. பர்ஹானுக்கும் காட்சி ‘Okay’. இப்போதுதான் சர்மாவின் முகத்தில் இலேசாக சிரிப்பு தவழ்ந்த்து.

‘வேற்றுப் பாதை’ குறுந் திரைப்படத்தில் ஐந்து ஆறு நொடிகள் காட்டப்படும் இந்த ஒரு காட்சியைப் படமாக்குவதற்கு 10 – 15 நிமிடங்கள் ஆகின.

ஒளிப்படங்களை (Still photo) நிவேதன் பிடித்தார். திரைப்படத்தின் தொகுப்பு (Editing)க்கும் தொடர்ச்சி நிலை (Continuity)க்கும் ஒளிப்படங்கள் பயன்படும்.

‘சமூகத்தில் சர்வ சாதாரணமாக நடக்கின்ற தவறொன்றை மையமாக வைத்து ‘வேற்றுப் பாதை’யின் கதை உருவாக்கப்பட்டது’ என்று இக் குறுந் திரைப்படத்தின் கதையை ஒரு வரியில் கூறினார் இயக்குனர் கஜானந்த சர்மா.

‘குறிப்பாக இளைஞர்கள் பொறுப்பின்றி நடந்துகொள்ளும் இந்தத் தவறு குறித்து விழிப்புணர்வு ஊட்டும் நோக்கில் இந்தக் குறுந் திரைப்படத்தை உருவாக்குகின்றேன்’ என்றும் அவர் The Puttalam Times-க்குத் தெரிவித்தார்.

இயக்குனர் சர்மா (வெள்ளை நிற சட்டை) ஒளிப்பதிவாளர் பர்ஹான்

‘வேற்றுப் பாதை’ ஒளிப்பதிவு சர்மாவின் வீட்டில் நடைபெறுகின்றது. சர்மாவின் தந்தை பால கிருஷ்ண குருக்கள் அவ்வப்போது வந்து பார்வையிடுவார். சர்மாவின் அம்மாவும் வந்து பார்ப்பார். மகனின் திறமைகளைக் காணும் இருவர் முகத்திலும் பூரிப்பு.

‘வேற்றுப் பாதை’ குறுந் திரைப்படக் குழுவினர் தமது 20 ஆம் வயதுகளில் வாழும் வளர் இளம் வாலிபர்கள். இவர்கள் இந்த சமூகத்திற்கு ஏதோ ஒரு நல்ல செய்தியை சொல்ல வருகின்றார்கள். அதற்காக, தமக்குத் தெரிந்த திரைப்படம் என்ற மொழியைத் தெரிவுசெய்துள்ளார்கள்.

தாம் சொல்லப்போகும் செய்தியை இன்னும் ஓரிரு வாரங்களில் நாம் அனைவரும் பார்வையிடலாம் என்று இயக்குனர் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.

இக் குறுந் திரைப்படத்துக்கான ஊடக பங்காளியாக The Puttalam Times சமூக ஊடகம் செயல்படும்.

வேற்றுப் பாதை’ (Short Film) விவரம்:

Production: London Eagle

Story, Editing, Direction: Gajanantha Sarma

Videography: M.N.M. Farhan

Cast:
L. Yoga Vidushan
C. Vinith

Still photo: N. Nivethan

SFX: N. Sayanthan

Youtube Channel: Gajanantha Sarma

Media Partner: The Puttalam Times

தொகுப்பும் படங்களும்: Hisham Hussain, Puttalam


Post a Comment

0 Comments