‘இஸ்ரோ’ மற்றும் ‘நாசா’ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் விண்வெளியில் ஆய்வுகள் மேற் கொண்டுள்ளன. அதற்காக விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அவை விண்வெளியில் குறிப்பிட்ட தூரம் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
ஆனால் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம் விண்மீன் மண்டலத்தில் ஊடுருவி மிக நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய புதிய விண்கலத்தை தயாரிக்க உள்ளது. இந்த விண்கலம் வால் நட்சத்திரங்கள் மற்றும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களில் தரை இறங்கவும், அவற்றை கடந்து செல்லக் கூடிய திறன் படைத்ததாகவும் இருக்கும் மற்றும் எரிகற்களை உடைத்து நொறுக்கும் சக்தி வாய்ந்ததாகவும் தயாரிக்கப்பட உள்ளது.
அதி நவீன சக்தி வாய்ந்த இந்த விண்கலத்தை ‘நாசா’வின் பசாதெனா ஜெட் புரோபுல்சன்’ ஆய்வகத்தின் முதன்மை கண்டுபிடுப்பாளர் மாஷாகிரோ ஓனோ தலைமையிலான நிபுணர்கள் வடிவமைத்துள்ளார். இந்த விண்கலம் வினாடிக்கு 1.5 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் திறன் படைத்ததாக இருக்கும்.
0 Comments