Subscribe Us

header ads

மூலத்தை துரத்தும் துவரை வேர்



மூலிகையின் பெயர் – துவரை தாவரவியல் பெயர் – CAJANUS INDICU பயன்தரும் பாகங்கள் – இலை, காய், துவரம்பருப்பு, பொட்டு, வேர் இளம் தழிர் மற்றும் அதன் தடிபாகம் முதலியன. துவரை இலைகள் மிளகோடு சேர்த்துப் பல்லீறுகளைச் சுத்தப்படுத்துவும், பல் வலிக்கும் பயன்படும். இவ்விலைகளை அரைத்து முலைக்குப் பூச பால் சுரப்பது நிற்கும். 

  குறைந்தளவே தண்ணீர் அருந்துபவர்கள், அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள், நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்கள், வாயுவை பெருக்கக்கூடிய பதார்த்தங்களை அதிகம் உட்கொள்பவர்கள், கடுமையான மலச்சிக்கல் உள்ளவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் மூலநோய்க்கு ஆட்படுகிறார்கள். 

இவர்கள் துவரை வேரை நிழலில் உலர்த்தி முடிந்தளவு பட்டையை உரித்து, நன்கு பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராம் அளவு தினமும் இரண்டு வேளை தேன் அல்லது வெண்ணெயுடன் கலந்து சாப்பிட, ஆசனவாய் பகுதியில் தோன்றிய வீக்கம் மற்றும் சதை வளர்ச்சி நீங்கும். துவரம் பருப்பிலும் இந்த வேதிச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அன்றாட உணவில் நன்கு வேகவைத்து உட்கொண்டு வந்தால் மலவாய் பகுதியில் தோன்றிய வீக்கம் நீங்கும். 

Post a Comment

0 Comments