Subscribe Us

header ads

நாங்கள் செத்த பாம்பல்ல, அதைக் கூறும் மனோ கணேசன் ஒரு இனவாதி! சீறும் ஞானசார தேரர்


பொதுபல சேனா அமைப்பை செத்த பாம்புக்கு ஒப்பிட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன் ஒரு இனவாதி என்று கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன்அண்மையில் பொதுபல சேனா அமைப்பை செத்த பாம்புக்கு ஒப்பிட்டிருந்தார். 

அத்துடன் பொதுபல சேனா அமைப்பு தொடர்ந்தும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டால் கைகட்டிப்பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை என்றும் கடுமையாக எச்சரித்திருந்தார்.

இது குறித்து பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் திவயின பத்திரிகை கருத்துக் கேட்டிருந்தது.

இதன் போது பதிலளித்துள்ள ஞானசார தேரர்,

எங்களது அமைப்பை செத்த பாம்புக்கு ஒப்பிட்டு அமைச்சர் மனோ கணேசன் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனால் அவரது கருத்துக்கள் தான் உண்மையில் செத்த பாம்புக்கு ஒப்பானது. தவிரவும் அமைச்சர் மனோ கணேசன் ஒரு இனவாதியாவார்.

எங்களது பொது பல சேனா அமைப்பை செயலற்றதாக்கி முடக்கிவிட அமைச்சர் மனோ கணேசன் போன்ற இனவாதிகள் மனப்பால் குடிக்கின்றனர்.

ஆனால் நாங்கள் முன்னைவிடவும் தீவிரமாக சிங்கள மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக செயல்படவுள்ளோம். 

ஒருசில இனவாதிகளின் கூற்றுக்குப் பயந்து ஓடி ஒளிந்து விட பொது பல சேனா அமைப்பு கோழைகளின் அமைப்பல்ல. நாங்கள் தொடர்ந்தும் பல்வேறு வழிகளில் எங்கள் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments