- அக்கறைப்பறிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு கிடைத்துவரும் வரவேற்பினைக் கண்டு ஏனைய கட்சிகள் தமது பணிகளை அதிகமாக செய்வதற்கு ஆசைப்படுவதை பார்க்க முடிகின்றது என்று தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த பணியினை அன்று இந்த கட்சிகள் செய்திருந்தால் அம்மபாறை மாவட்ட மக்கள் தமது எத்தனையோ பிரச்சினைகளுக்கோ தீர்வை கண்டிருப்பார்கள் என்றும் கூறினார்.
பாராளுமன்றத் தேர்தலிற்கு பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும்,எமது வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அக்கறைப்பற்றுவில் இடம் பெற்ற பிரமாண்டமான நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும்,கட்சியின் வேட்பாளருமான ஹூசைன் இஸ்மாயிலினால் ஏற்பாடு செய்யப்பட்ட இநத் வரவேற்பு மற்றும் நன்றி நவிலல் வைபவம் அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் பிரதி அமைச்சர் அமீர் அலி,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம்.நவவி,இஷாக் றஹ்மான்,அப்துல்லா மஹ்ரூப் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ஜெமீல் உள்ளிட்ட பெரும் எண்ணிக்யைலானவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரைாயற்றும் போது –
பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கு மக்கள் புதியதொரு அடித்தளத்தினை இட்டுள்ளனர்.மதன் முறையாக மயில் சின்னத்தில் எமது கட்சி களம் இறங்கிள போது பரீட்சயமல்லாத சின்னத்திற்கும்,எம்மீதும் கொண்ட நம்பிக்கையினை உறுதிப்படுத்தி 33 ஆயிரம் மக்கள் தமது வாக்குகளை அளித்தனர்.இவ்வாறு நீஙகள் ஒவ்வொருவரும் அளித்த வாக்கு என்பது இந்த மாவட்டத்தின் உண்மையான எந்த பொருட்களுக்கும் சோரம் போகாத வாக்கா கும்.
நீங்கள் அளித்த இந்த வாக்கானது அம்பாறை மாவட்டத்தின் எமது மக்களுக்கு பல வழிகளிலும் உதவிகளை செய்யவுள்ளது.
நமது கட்சி பெற்றுக் கொண்டுள்ள 5 பாராளுமன்ற ஆசனம் என்பது இந்த நாட்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினது விடிவுக்கும்,வமோசனத்திற்கும் உறுத்துணையாக அமையும் என்ற உத்தரவாதத்தை தரவிரும்புகின்றேன்.இன்று சிலர் வெற்றி மமதையில் தமக்கு வாக்களிக்காதவர்களை பழிவாங்கும் பணியினை செய்ய ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகின்றது.இதனை செய்யாதீர்கள் என்று கேட்கவிரும்புகின்றேன்.இந்த நல்லாட்சியில் அப்பாடியான செயல்கள் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது ஒன்று என்பதை சொல்லி வைக்கவிரும்புகின்றேன்.
தேர்தலில் நமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சொற்ப வாக்குவித்தியாசத்தால் தான் தோல்வியுற்றது.இதனை நாம் தோல்வியாக பார்க்கவில்லை,எமது அம்பாரற்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவம் வாக்குகள என்னும் வேளையில் உறுதிபடுத்தப்பட்டிருந்தது,ஆனா ல் பின்னர் அது எவ்வாறு மாறியது என்பது தொடர்பில் வாக்காளர்கள்,ஆதரவாளர்கள்,போரா ளிகள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.இதனால் நாம் மீண்டும் இந்த வாக்குகளை எண்ணுவதற்கான நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கையினை கோறவுள்ளோம்.இதற்காக எமது சட்டத்தரணிகள் தயாராகிவருகின்றனர்.
எது எவ்வாறாக இருந்தாலும் எம்மை பொருத்தவரைய இந்த வெற்றியும்,இழப்புக்களும் இறைவனின் நாட்டம் இன்றி இடம் பெறாது என்ற உறுதியினை கொண்டவர்கள்.ஆதலால் நாம் எதனை செய்த போதும் பொறுமையுடனும்,ஒழுக்கத்துடனுமே செய்ய வேண்டும்.நாம் மக்கள் பணிகளுக்காக வந்தவர்கள்.பதவிகளும்,பட்டங்களு ம்.மக்களுக்கு பணியாற்றவே என்பதை அரசியல்வாதிகளான நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.
எமது கட்சிக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.அதே போல் எமது கட்சிக்கு வாக்களித்த எந்தவொருவருக்கும் எங்கும் அநீதி இழைக்க ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை அதே போல் எமது சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படும் என்றால் அங்கு நாங்கள் ஆஜராகியிருப்போம்.இவைகள் சமூகக் கடமை என்றும் அமைச்சரி றிசாத் பதியுதீன் இதன் போது கூறினார்.
0 Comments