கொழும்பு – தர்மபால மாவத்தை பகுதியிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் இன்று (27) அதிகாலை 5.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் காவலாளியை தாக்கி பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காயமடைந்த காவலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


0 Comments