Subscribe Us

header ads

33 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இரவு ரத்த நிலா: நாசா இணைய தளத்தில் பார்க்கலாம்...


செப்டம்பர் மாத இறுதியில் பவுர்ணமி அன்று சந்திரன் பூமிக்கு அருகே தோன்றும். அந்த முழு சந்திரனை ‘அறுபடை நிலா’ என அழைப்பார்கள். பண்டைய காலத்தில் இந்த நிலா வெளிச்சத்தை நம்பியே விவசாயிகள் அறுவடையை தொடங்குவார்கள்.

இது சாதாரண நிலாவை விட 30 சதவீதம் பிரகாசமாக இருக்கும். எனவே இரவு வேளைகளில் அறுவடை செய்வதால் அறுவடை நிலா’ என அழைக்கப்படும் இத்தகயை சந்திரன் கிரகணத்துக்குள் அகப்படுவது மிகவும் அரிது.

ஆனால் இன்று பவுர்ணமியாகும். அதே நேரத்தில் சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. பூமிக்கு அருகே தெரியும் முழு நிலவு கிரகணத்துக்குட்படுவதால் அது ரத்த நிறத்தில் சிவப்பாக தோன்றும். அதையே ‘ரத்த நிலா’ என அழைக்கிறார்கள்.

அந்த அரிய ரத்த நிலா இன்று இரவு தோன்றுகிறது. கடந்த 33 ஆண்டுகளுக்கு பிறகு இது தோன்றவுள்ளது. இதைவிட அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் சாதாரணமாக பார்க்க முடியும். கண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் தேவையில்லை.

கனடாவின் டொரண்டோ நேரப்படி இரவு 10.11 மணியிலிருந்து 11.23 மணிவரை இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவின் ‘நாசா’ இணையதளம் மூலம் பார்க்கலாம்.

இந்திய நேரப்படி (திங்கட் கிழமை) அதிகாலை 5.40 மணி முதல் சூரியன் உதிக்கும்வரை இந்த நிகழ்வை இணையதளம் மூலம் காணலாம். இதற்கு அடுத்த ரத்த நிலாவை 2033–ம் ஆண்டில்தான் பார்க்க முடியும்.

Post a Comment

0 Comments