Subscribe Us

header ads

ஒரு விருப்பு வாக்கிற்கு 1400 ரூபாய் செலவிட்டார் சம்பிக்க: கம்மன்பில


கடந்த பொதுத் தேர்தலில் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஒரு விருப்பு வாக்கிற்காக 1400 ரூபாய் செலவிட்டுள்ளார் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தான் ஒரு வாக்கு பெற்றுகொள்வதற்கு வெறும் 63ரூபாய் மாத்திரமே செலவிட்டதாக இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதலளிக்கும் வகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த உள்ளூர் தேர்தல்களில் போட்டியிடுகின்றமை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கும் வகையில், அது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போது மேற்கொள்ளப்படுகின்றவைகள் தொடர்பில் எதனையும் கூற முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றததில் சுயாதீனமாக செயற்படுகின்றமை குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக குறிப்பிட்ட அவர் எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி ஏற்டுள்ளதாகவும், அதன் பலனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறும் அரசாங்கத்திடம் கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments