சந்தை முதலீட்டுத் துறையில் இலங்கையின் முதன்மை ஐந்து தனியார் வங்கிகளில் ஒன்றாக திகழ்வதுடன், நாட்டில் துரித வளர்ச்சியை பெற்றுவரும் வங்கிகளில் ஒன்றாகவும் விளங்கும் யூனியன் வங்கி, வேகமாக விஸ்தரிக்கப்படும் அதன் சில்லறை வங்கியியல் துறையில் மற்றுமொரு மைல் கல்லாக, யூனியன் வங்கி VISA சர்வதேச பற்று அட்டையினை (Union Bank VISA International Debit Card) அறிமுகம் செய்துள்ளது.
பிளாட்டினம் மற்றும் கிளாசிக் ஆகிய பிரிவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் யூனியன் வங்கி VISA சர்வதேச பற்று அட்டையானது, தனித்துவமிக்க, கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் ஏராளமான கட்டணக்கழிவு வழங்கல்களை அட்டை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுப்பதோடு, ஒன்லைன் கொடுக்கல் வாங்கல் மற்றும் பில் கொடுப்பனவுகளை மேற்கொள்வதையும் இலகுவாக்குகின்றது.
யூனியன் வங்கி VISA சர்வதேச பற்று அட்டையினை பெறும் வகையில் விண்ணப்பிப்பது மிக இலகுவானது. அதற்கு நீங்கள் யூனியன் வங்கியில் நடைமுறை அல்லது சேமிப்புக் கணக்கொன்றை பேணுவதே போதுமானது.
இந்த அட்டையானது உங்கள் பரிவர்த்தனைகள் குறித்த இலவச SMS அறிவித்தல்கள் உள்ளிட்ட பல்வேறு பெறுமதி சேர்க்கைகளை அளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது இது குறித்து கருத்துரைத்த யூனியன் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்கிரமசிங்க ,
VISA போன்ற சர்வதேச வர்த்தக நாமத்துடன் யூனியன் வங்கி கொண்டுள்ள பங்குடமையானது, சிறப்பான பெறுமதியினை அளிப்பதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளருக்கு 1 மில்லியனுக்கும் மேற்பட்ட VISA ATM களுக்கான அணுக்கம் மற்றும் சர்வதேச ரீதியில் 29 மில்லியன் VISA வசதி கொண்ட வணிகர்களுடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக்கூடிய வசதி ஆகியவற்றை அளிப்பதன் ஊடாக சௌகர்யமான வங்கியியல் அனுபவத்தையும் தருகின்றது.
யூனியன் வங்கி VISA யு சர்வதேச பற்று அட்டையின் அங்குரார்ப்பணமானது, வாடிக்கையாளர்களின் சௌகர்யத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கிலும், சில்லறை வங்கியியல் சேவையினை வலுப்படுத்தும் நோக்கிலும் தொடர்ச்சியாக வங்கியினால் முன்னெடுக்கப்படும் மேம்படுத்தும் முனைப்புகளை வெளிப்படுத்தும் ஒரு மைல் கல்லாகவும் விளங்குகின்றது.
யூனியன் வங்கி VISA சர்வதேச பற்று அட்டையானது வெறுமனே ஒரு ATM அட்டையாக மாத்திரமல்லாமல், பல்வேறு மேலதிக அனுகூலங்களுடன் அதிசிறந்த சலுகைகள், கட்டணக்கழிவுகள் ஆகியவற்றையும் வருடம் முழுவதும் வழங்குகின்றது” என்றார்
இந்த யூனியன் வங்கி VISA சர்வதேச பற்று அட்டையானது, 2015 ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி, சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற அங்குரார்ப்பண வைபவத்தில் வைத்து VISA சேவைகளுக்கான சிரேஷ்ட பணிப்பாளர் ராமா தடேபள்ளியால் யூனியன் வங்கியின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கி, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் குறிப்படத்தக்க இருப்பினை பதிவுசெய்துள்ள, ஐக்கிய அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள சர்வதேச தனியார் முதலீட்டு நிறுவகமான TPG இனால் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
TPG இன் யூனியன் வங்கிக்கான US$117 Mn முதலீடானது, இலங்கையின் மிகப்பெரும் நேரடி வெளிநாட்டு முதலீடு என்ற பெயருடன், நாட்டின் நிதிச்சேவைகள் தொழிற்துறையில் முக்கிய மைல்கல்லை பதிந்துள்ளது. வலூன அடித்தளம், நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச செய்நுட்ப அறிவு ஆகியவற்றுடன் செயற்படும் யூனியன் வங்கி, சந்தை முதலீட்டாக்கத்தில் இலங்கையின் முதன்மை ஐந்து சிறந்த வர்த்தக வங்கிகளில் ஒன்றாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், சில்லறை வங்கியியல் சேவைகள் முதல், சிறிய மற்றும் நடுத்தர வங்கியியல், கூட்டாண்மை நிதிச்சேவைகள் தொழிற்துறைகளில் முழுமையான சேவைகளை அளிக்கின்றது.

0 Comments