(எம்.எம்.ஜபீர்)
அம்பாரை மாவட்டத்தில் சகோதர இனமான முஸ்லிம்கள் பல கூறுகளாக பிளவுபட்டு பல கட்சிகளுக்கு வாக்களிக்கவுள்ள நிலையில் தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
இவ்வாறு நேற்று (13) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் எம்.நடேசலிங்கம் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ,
கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் மிகவும் ஒற்றுமையாகவும் தமிழ் உணர்வுகளுடனும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து தற்போது ஆட்சியிலுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெற செய்வதற்கு மிகப் பங்களியாக தமிழ் மக்களே இருந்தார்கள்;. அதுபோன்று இம்முறையும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக தமிழ் உணர்வுகளோடு ஒற்றிணைந்து வடகிழக்கு முழுவதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்பதனூடாக 20 பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்வதன் ஊடாக தலைவர் சம்பந்தன் கூறுவது போன்று 2016 ஆண்டு தமிழ் மக்களுக்கான அனைத்து பிரச்சினைகளுக்கும்நிரந்தர தீர்வு பெற்றுக்கொள்ள முடியும்.தமிழ் இளைஞர்இ யுவதிகள் வேலை வாய்ப்பு தேவை என்பதற்காக சில மாற்று இனக் கட்சிகளுடன் செல்வது மிக வேதனையாகவுள்ளது. தொழில் வாய்பை பெறவேண்டும் என்பதற்காக தமிழ் இளைஞர் யுவதிகள் இப்படி மாற்று கட்சிக்கு செல்வது தமிழ் இனத்தை குத்தகைக்கு விடும் செயலாகதான் நினைக்கின்றேன்.
எனது தந்தையார் 1950 ஆம் ஆண்டு அப்போது வட்டார பிரதிநிதியாக தொடச்சியாக நான்கு தடைவைகள் இருந்தவர் நான் அரசியலில் புதியவர் என்று சொல்ல முடியாது ஏனெனில் எனது தந்தை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தமிழ் மக்களின் தேவைகளுக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் பாடுபட்டவர்.அதுபோன்று அவருடைய வழியில் வாழ்ந்து வந்த நாங்கள்பல சேவைகளை எந்தவித பதவிகள் இல்லாமல் அரசியல் ரீதியாக கடந்த காலங்களில் செய்துள்ளேன்.
அம்பாரை மாவட்டத்தில் சிறுபான்மையாக இருக்கின்றோம். மாற்று இன சகோதரர்களிடம் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் இருக்கின்றன. தமிழ் மக்களிடம் 82 ஆயிரம் வாக்கு மாத்திரம் தான் இருக்கின்றது. நாங்கள் ஒற்றுமைப்படுவதன் மூலம் 80 வீதம் வாக்களிப்பதன் மூலம் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற முடியும். அதன் ஊடாக அபிவிருத்தி திட்டங்கள் அடிப்படை தீர்வு தேசிய தீர்வுகள் அனைத்தையும் பெறமுடியும்


0 Comments