மஸ்ஹெலியா நகரில் பொது மக்களுக்கும், வர்த்தகர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கும் இடையூறு விளைவித்த 4 மன நோயாளிகளை அங்கொடை முல்லேரியா மனநோயாளர் வைத்தியசாலைக்கு ஒப்படைக்குமாறு ஹற்றன் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி நான்கு மன நோயாளிகளும் மஸ்ஹெலியா நகரப்பகுதியில் பொது மக்களுக்கு மற்றும் வர்த்தகர்கள் பாடசாலை மாணவர்களுக்கும் இடையூறு விளைவிப்பதாக பொது மக்களால்
மஸ்ஹெலியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டையடுத்து பொலிஸார் குறித்த மனநோயாளிகளை கைது செய்து இன்று ஹற்றன் பதில் நீதவான் எஸ்.இராஜேந்திரன் முன்னலையில் ஆஜர்ப்படுத்தினர்.
இதன்போதே அவர் இவ்வாறு உத்திரவிட்டுள்ளார்.
குறித்த மன நோயாளிகளில் மூன்று பெண்களும் ஆண் ஒருவரும் என நான்கு பேருக்கும் உறவினர்கள் இல்லை எனவும் இவர்கள் மலையகப்பகுதியை சேர்ந்த மனநோயளர்கள் என மஸ்கெலியா பொலிஸ் நிலையக பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.
-Tamil Win-
0 Comments