ரூஸி சனூன் புத்தளம், கரீம் ஏ. மிஸ்காத்
புத்தளம் நகர மத்தியில் அமைந்துள்ள கடை தொகுதியில் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை 3.00 மணியலவில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூன்று கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவித்தனர்.
புத்தளம் நகர மத்தியில் அமைந்துள்ள கடை தொகுதியில் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை 3.00 மணியலவில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூன்று கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவித்தனர்
புத்தளம் குருநாகல் வீதியில் அமைந்துள்ள தொடரான கடை தொகுதிகளில் காணப்பட்ட ஒரு அழகு நய வியாபார பொருட்களின் விற்பனை நிலையம் மற்றும் இரு கருவாடு மொத்த வியாபார நிலையங்களே இந்த அனர்த்தத்தினால் முற்றாக சேதமாகியுள்ளன.
கருவாடு மொத்த வியாபார நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்படிருந்த பெருமளவிலான கருவாடுகளும் இதன்போது தீக்கிரையாகியுள்ளன.
குறித்த பிரதேசத்தில் தீ பரவ துவங்கியதை கேள்வியுற்று புத்தளம் ராணுவம் , கடற்படை மற்றும் பொலிஸ் நிலைய தீ அணைக்கும் வாகனங்கள் உடனடியாக விரைந்து ஏனைய கடைகளுக்கும் தீ பரவா வண்ணம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
மின் ஒழுக்கே இந்த தீ அனர்த்தத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரனைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக புத்தளம் பொலிசார் மேலும் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.











0 Comments