Subscribe Us

header ads

குப்பையை குப்பைத்தொட்டியில் போட்டால் ஃப்ரீ வைஃபை (FREE WIFI)!


அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் மக்களின் அன்றாட வாழ்க்கையை திருப்பிப்போட்டுள்ளது. 

தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த இந்த வசதிகளை, மக்கள் ரசனையுடன் பல வழிகளில் பயன்படுத்திக்கொள்கின்றனர். மும்பையை சேர்ந்த ப்ரதீக் அகர்வாலும், ராஜ் தேசாயும் இதில் கொஞ்சம் சுவராஸ்ய ரகம். 

இவர்கள் இருவரும் இணைந்து கண்டுபிடித்துள்ள ’ஒரு குப்பைத்தொட்டி’ தான் இப்போது மும்பையில் ஹாட் டாபிக்.


இவர்கள் தயாரித்துள்ள நவீன குப்பைத்தொட்டியில் குப்பையை கொட்டும் ஒவ்வொருவருக்கும் ப்ரத்யேகமான பாஸ்வேர்ட் ஒன்றை காண்பிக்கிறது. இதன்மூலம் அங்கே இருக்கும் வைஃபை வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். செல்போன் ஆபரேட்டர் MTSன் உதவியோடு மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை வெற்றிகரமாக இயங்குகிறது.

டென்மார்க், ஃபின்லாந்து, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளுக்கு தொழில் ரீதியான பயணம் செய்துள்ள இவர்கள், அந்நாடுகளின் சுற்றுச்சூழல் தூய்மைக்கு, நகர அமைப்பையும் தாண்டி மக்களின் மனப்பான்மையும் முக்கிய பங்கு வகிப்பதை கவனித்துள்ளார்கள். அதன் பின்னணியே ‘Wi-Fi Trash bin’ என்ற இந்த குப்பைத்தொட்டி வடிவமைப்பதற்கு காரணம் என்கின்றனர் இவர்கள்.


முதற்கட்டமாக பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி ஆகிய பெருநகரங்களில் நடக்கும் வீக் என்ட் கொண்டாட்டங்களில், ‘Wi-Fi Trash bin’ சோதனை செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்பவர்கள் கூல்ட்ரிங்க்ஸ், ஸ்னாக்ஸ் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு பேப்பர் ப்ளேட்களை குப்பைத் தொட்டியில் போடுவதில்லை.


இதை சரி செய்வதற்கு மக்களின் மனப்பான்மையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று நினைத்த ப்ரதீக் மற்றும் ராஜு, இன்றைய அத்தியாவசியத் தேவையாகிப்போன வைஃபை ஐடியாவை செயல்படுத்தியதாகச் சொல்கிறார்கள். 

இருவருக்கும் பாராட்டுக்கள் குவிகின்றது இப்போது !

- அ. நிவேதா

-Vkalathur-

Post a Comment

0 Comments