Subscribe Us

header ads

துபாயில் பிச்சை மூலம் ஒரு நாள் வருமானம் சுமார் Dhs 25,000/- ( இலங்கை ரூபாய் மதிப்பு சுமார் 910696.63/=)



பிச்சை மூலம் ஒரு நாள் வருமானம் சுமார் Dhs 25,000.

என்ன ஆச்சிரியமாக உள்ளதா ? தொடர்ந்து படியுங்கள். 


சமீபத்தில் துபாய் போலீசார் ரோந்து செல்லும் போது Deira அருகே ஒரு மசூதியில் ஆசிய நாட்டை (நம்மூர் ஆள தான் இருக்கனும் ) சேர்ந்த ஒருவர் அழுக்கு துணியுடன் போவோர் வருவோர் ஒருவரையும் விடாமல் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார். 

போலீசார் விரைந்து சென்று அந்த நபரை கைது செய்து சோதனை செய்ததில் அவரிடம் கட்டு கட்டாக சுமார் Dhs 25,000/- இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 

மேலும் அவரிடம் விசாரித்ததில் அது அவர் ஒரு நாளில் பிச்சை எடுத்தது என தெரிந்து அனைவரும் வாய் அடைத்துப் போனார்கள். 

மேலும் துபாயில் ஆங்காங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சுமார் 325 பேர் பிடிப்பட்டனர். இவர்கள் பிச்சை மட்டுமில்லாமல் வழிப்பறி,திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

Post a Comment

0 Comments