Subscribe Us

header ads

கள்ள வாக்கு போடுவேரை கைது செய்ய விசேட நடவடிக்கை


கள்ள வாக்கு போடுவேரை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கள்ள வாக்கு போட முயற்சிக்கும் தரப்பினரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த, கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எவரேனும் கள்ளமாக வாக்குகளை பதிவு செய்ய முயற்சித்தால் அவரை கைது செய்து,  நீதிமன்றின் ஊடாக தடுப்புக் காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலின் போது எந்தவொரு சட்ட விரோத நடவடிக்கையையும் மேற்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது.

ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் அல்லது தற்காலிக தேர்தல் அடையாள அட்டைகளை எடுத்துக் கொண்டு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வேண்டும்.

வாக்குச் சாவடிகளுக்கு அருகாமையில் தேவையற்ற வகையில் சஞ்சரிப்பது, கூடிப் பேசுவது, பேரணியாக செல்லுவது முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடும் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments