அமெரிக்காவின் ஹோண்டுரஸ் மாகாணத்தில் உள்ள லா எண்ட்ராடா பகுதியை சேர்ந்தவர் நியாசி பெரேஸ் (வயது16). கர்ப்பிணி பெண்ணான இவர் சம்பவத்தன்று வீட்டின் வெளியில் உள்ள கழிவறைக்கு செல்ல முயன்றுள்ளார். அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால் அவர் மயக்கமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நியாசி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து நியாசியை திருமண ஆடையுடுத்தி அவரை அடக்கம் செய்தனர். இந்நிலையில் அடுத்த நாள் சமாதிக்கு நியாசியின் கணவர் ருடி கோன்சாலஸ் சென்று உள்ளார். சமாதியின் உள் மனைவியின் நியாசியின் குரல் கேட்டதையடுத்து அவர் அதிர்ச்சி அடைந்தார் தனது மனைவி இறக்கவில்லை என்றும் சமாதியை திறக்கவேண்டும் என்றும் அவரது.கணவர் கூறினார்.
இது கிஉறித்து கோன்சாலஸ் கூறும் போது நான் கல்லறையில் எனது கைகளை வைத்தபோது உள்ளிருந்து சத்தம் வருவதை கேட்டேன்.அது எனது மனைவியின் குரலாக இருந்தது. அவர் உதவிக்கக சத்தம் போட்டு உள்ளார்.என்று கூறினார்.
இதையடுத்து சமாதியை உடைத்து பார்த்தபோது நியாசி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பயனளிக்காமல் நெய்சி இறந்துபோனார்.இதையடுத்து அவரது உடல் முதலில் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது
0 Comments