இலங்கை வாழ் முஸ்லிம் உம்மத்தினரின் தேசிய தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களின் காதில் பூ சுத்தும் கௌரவ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை அழிவை நோக்கி நகர்த்தும் தலைமைக்கு என்னுடைய சலாத்தை தெரிவித்துக் கொண்டு.எனது பகிரங்க கேள்வியை தொடுக்க விளைகிறேன்.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஹெலி விபத்தில் மறைந்த தேசிய தலைவரும், முஸ்லிம் சமுகத்தின் விடிவுக்காக போராடிய சுதந்திர தியாகியுமான ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி முகம்மத் ஹுசைன் முகம்மத் அஸ்ரப் அவர்களை வைத்து வயிருவளக்கும் நீங்கள் அவர் விட்டு சென்ற பணியை தொடரபோவதாக கூறினீர்கள் ஆனால் செய்தது என்ன?
எனது கேள்விகளுக்கு முடிந்தால் பதில் சொல்லுங்கள் (பதில் சொல்ல முடியாது என்பது உலகறிந்த உண்மை.)
1. அம்பாறை ,மட்டகளப்பு, வன்னி போன்ற இடங்களில் தேசிய தலைவர் அஸ்ரப்பின் புதிய வெளிச்சங்கள் பாடலை தேர்தல் காலங்களில் ஒலிபரப்புன் நீங்கள் ஏன் கண்டி,கொழும்பு போன்ற பிரதேசங்களில் ஒளிபரப்புவதில்லை? (பெரும்பான்மை மக்களை சாடி விடாதீர்கள் ) இஸ்லாத்தில் இசை ஹராம் என்பதை குரான் கதீசை கொண்டு நிறுவிய கட்சிக்கு தெரியாமல் போனது ஏனோ?
2. சிறிய விடையங்களுக்கே நீதிமன்றம் செல்லும் நீங்கள் தலைவர் அஸ்ரப்பின் மரணத்திற்கு இதுவரை கொலையா? விபத்தா? என இறுதி முடிவு கிடைக்காமல் இருக்கிறது.சிரஷ்ட சட்டத்தரணிகள் அதிகமாக உள்ள கட்சிகளில் உங்களது கட்சியும் ஒன்று. அப்படி இருக்க நீங்கள் ஏன்?கடந்த 15வருடங்களாகியும் இந்த விடயத்தை கையில் எடுக்க வில்லை ?? இந்த விடயத்தில் நீங்கள் மௌனமாக இருப்பது சினிமா பாணியில் தலைமைதுவத்திட்கு ஆசைப்பட்டு நீங்களும் தலைவரின் கொலைக்கு சோரம் போகிருக்கலாம் எனும் சந்தேகத்தை என்னிடம் தோற்று விக்கிறது.......!!(மன்னிக்கவு ம் மூளை பல வகையிலும் சிந்திக்கும் )
3.அளுத்கம,வில்பத்து பிரச்சினைகளின் போது நீங்கள் நீண்ட மௌனம் காத்தது ஏன்? மௌனம் காப்பது ஏன்? தேர்தல் வந்தால் வன்னிக்கு செல்லும் நீங்கள் சாதாரன நேரங்களில் செல்ல மறுப்பது ஏன்?
4. கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் குரல் என்று தம்பட்டம் அடிக்கும் நீங்கள் முதலில் வெளியேற மறுத்தது ஏன்?( வெளியேறிய காரணம் உலகம் அறியும்?)
5.கிழக்கின் முதலமைச்சரை அம்பாறைக்கு வழங்க மறுத்து மட்டக்களப்பு மண்ணுக்கு வழங்க காரணம் கட்சி விஸ்தரிப்பு தவிர வேறு காரணத்தை உங்களால் சொல்ல முடியுமா?
6. ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொருத்தருக்கு வாயால் கொடுக்கும் நீங்கள் செயலால் தேசிய பட்டியலை யாருக்கு கொடுப்பிர்கள் ? (தேசிய பட்டியல் கிடைத்தால் )
7.இம்முறையும் அமைச்சராகி மக்களுக்கு என்ன சேவை செய்யபோகிறீர்கள் எனும் உங்களது தேர்தல் வாக்குறுதி எப்போது வெளிவரும்?
8.ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் ஜனாதிபதி மைத்திரி அவர்களை ஆதரிக்க பணம் வாங்கியதாக கூறப்பட்ட குற்றசாட்டை இதுவரை மறுக்காமல் இருப்பதன் மூலம் அதனை உண்மையென ஏற்றுகொள்கிறீர்களா?
9.கட்சியை உருவாக்குவதிலும் வளர்ப்பதிலும் தன்னை அர்ப்பணித்த அதாவுல்லாஹ்,ரிசாத்,சேகு இஸ்ஸதீன், பசீர் செகுதாபூத், ஜவாத்,ஜெமீல்,வை.எல்.எஸ்,தௌபீக் ,ஹிஸ்புல்லாஹ்,அமீர் அலி, எங்கே?தலைவர் அஸ்ரப்பின் காலத்தில் இவர்களால் கட்சிக்குள் இருக்க முடியுமாக இருந்தால் உங்களது தலைமையில் இருக்க முடியாது போனது ஏன்? தலைமைத்துவத்தின் பிழையை ஒப்பு கொள்கின்றீர்கள் தானே ?
10.முஸ்லிம் காங்கிரசையும் உமது தலமைத்துவத்தையும் நம்பி வாக்களித்த கட்சி போராளிகளின் ஊர்களுக்கு நீங்கள் அமைச்சராக இருந்த காலங்களில் உங்களால் செய்த சேவைகளை பட்டியல் இட முடியுமா? (ஊரான் பெத்த பில்லைகலக்கு உங்கள் பெயரை வைத்தது தவிர, ஊரான் வீட்டு கோழியருத்து உம்மா பேருல கத்தம் ஒதினது தவிர?)
11.தலைவர் அஸ்ரப் சொன்ன பாதையை விட்டு விலகி பயணிக்கும் நீங்கள் ஏன் தலைவர் வைத்து பிரச்சாரம் செய்கிறீர்கள் ?
12. நீங்கள் ஐ.தே.கட்சி தொகுதி அமைப்பாளரா?அல்லது முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரா?
13.மயில் கட்சிக்கு எதிராக நீதிமன்றம் போக முடிந்த உங்களால் போதுபல சேன,சிங்கள ராவயக்கு எதிராக போக முடியாது போனதன் பெயர் சாணக்கியமா? இல்லை முட்டாள் தனமா?
14. தேர்தல் காலங்கள் தவிர்ந்து ஏனைய நிகழ்வுகளில் தலைவர் அஸ்ரப்பின் புகைபடத்தை உங்கள் போஸ்டர்களில் பிரசுரிக்க மறுக்கும் நீங்கள் தேர்தல் காலங்களில் மட்டும் பிரசுரிக்க முன்வருவது ஏன்?
இது போன்ற பல வினாக்கள் சகலர் மனதிலும் தேங்கி நிற்கிறது.
என்னால் தொடுக்க பட்ட இந்த கேள்விகளுக்கு சானக்கியராக தன்னை அடையாளப்படுத்தும் அமைச்சர் ஹக்கீம் ஏதாவது பகிரங்க மேடையில் பதிலளிப்பாரா? என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் ஹுதா உமர் கேள்வியேப்பியுள்ளார்.
(நூர்)


0 Comments